வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு 25 லட்சம் வழங்குவதாக அறிவித்த நடிகர் தனுஷ்!!

வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு 25 லட்சம் வழங்குவதாக அறிவித்த நடிகர் தனுஷ்!!

சென்னை 11 ஆகஸ்ட் 2024 கேரளா மாநிலத்தில் உள்ள வயநாட்டில் ஜூலை 30 ஆம் தேதி அன்று ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவு நள்ளிரவு நேரத்தில்
ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமானது.

இரவு நேரத்தில் அரங்கேரிய இந்த கோர சம்பவம் காரணமாக வீடுகளுக்குள் சிறுவர் முதல் பெரியவர் வரை உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் உறக்கத்திலேயே மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இந்த நிலச்சரிவை தொடர்ந்து ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை,
தன்னார்வலர்கள் என பல தரப்பை சேர்ந்தவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திரைப்பட உலகில் உள்ள பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த வரிசையில், நடிகர் தனுஷ் கேரளா நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூபாய். 25 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர், நடிகைகள் கேரளாவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

error: Content is protected !!