தென்னிந்திய நடிகர் சங்க 1500 உறுப்பினர்களுக்கு நடிகர் விஷால் மளிகை பொருட்கள் கொடுத்து உதவினார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க நமது மத்திய அரசும் மாநில அரசும் பலவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
தமிழ் திரைப்பட உலகில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள்
இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் இல்லாமல் தமிழ் திரைப்பட உலகில் உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதை போல, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.
நடிகர் விஷால் , தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் சென்னையை சேர்ந்த சுமார் 1500 பேருக்கு ஒரு மாதத்திற்கான தேவையான மளிகை சாமான்களை கொடுத்து உதவி இருக்கிறார்.
அந்த நிவாரண மளிகை பொருட்களை இன்று நடிகர் ஶ்ரீமன் மற்றும் ஃபைட் மாஸ்டர் தளபதி தினேஷ் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள்.
வெளி ஊர்களில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் வழங்குவதற்க்கான ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
மேலும் 300 திருநங்கைகளுக்கும் மளிகை சாமான் கொடுக்கப்பட்டது.
மற்றும் தொற்று நோய் தடுப்பதற்க்கான கைஉறை 1000 , முக கவசம் 1000 துப்புரவு தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த ஏற்பாடுகளை விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் செய்தார்.











