நாயே பேயே திரைப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார் நடிகர் யோகிபாபு.!
சென்னை 20 ஏப்ரல் 2021
நாயே பேயே திரைப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார் நடிகர் யோகிபாபு.!
தனி ஒருவன் திரைப்படத்தின்
படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிப்பில் சக்திவாசன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘நாயே பேயே’. இந்த திரைப்படத்தில் நடன இயக்குனர் தினேஷ், கதாநாயகனாக நடிக்கிறார்.
மற்றும் ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
பரபரப்பாக பல திரைப்படங்களில் நடித்துவரும் நடிகர் யோகி பாபு இந்த திரைப்படத்தின் விளம்பரப்பாடலில் நடித்து நடனமாடியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தினேஷ் மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணாவுடனான நட்புக்காக இந்த திரைப்படத்தின் விளம்பர பாடலில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார் நடிகர் யோகிபாபு.
அந்த பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுகுறித்து கோபி கிருஷ்ணா கூறியதாவது: “படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் யோகி பாபுவை நடிக்க வைக்க முயற்சி செய்தோம்.
படம் முழுக்க வரும் கதாபாத்திரம் என்பதால் அவரது கால்ஷீட் 40 நாட்கள் தேவைப்பட்டது.
ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை.
அவருக்கு பதிலாக முருகதாஸ் நடித்தார்.
இந்த படத்துக்கு தனது பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று சொன்ன அவரே கொடுத்த ஐடியா தான் இந்த விளம்பர பாடல்.
ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்து நடித்து கொடுத்தார்.
சம்பளம் வாங்கிக்கொள்ளவில்லை.
கேரவன் வசதி கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
எனக்காகவும் தினேஷ் மாஸ்டருக்காகவும் இந்த உதவியை செய்து கொடுத்தார்.
பரபரப்பாக நடித்துவரும் நேரத்தில்,நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பேருதவியை செய்த அவரை என்றும் மறக்க மாட்டோம்.
அவர் மட்டுமல்லாது சக்தி சரவணன், லொள்ளுசபா ஜீவா, பிக்பாஸ் பரணி, டைகர் தங்கதுரை, பிடிச்சுருக்கு அசோக் என அனைவருமே சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் நடித்து கொடுத்து உதவினார்கள்.
இவர்கள் இடம் பெற்றுள்ள பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் வியாபாரத்துக்கும் உதவியுள்ளது”. என்றார்.
இப்படம் வரும் 23 ம் தேதி வெளியாக இருக்கிறது.











