திரைப்பட உலகை விட்டு விலகும் நடிகை காஜல் அகர்வால்..?

சென்னை 20 மே 2021

திரைப்பட உலகை விட்டு விலகும் நடிகை காஜல் அகர்வால்..?

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2′ திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் விபத்து உலக நாயகன் கமல்ஹாசன் கட்சி பணி, கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு சின்ன கலைவாணர் விவேக் மரணம் உள்ளிட்ட பல காரணங்களால் இதன படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருக்கிறது.

இதனிடையில் நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்துக் கொண்டார்.

எனவே அவர் சினிமாவில் தொடர்வாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்து உள்ளது.

இது தொடர்பான ரசிகரின் கேள்விக்கு நடிகை காஜல் அகர்வால் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது..

“என் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

இதனால் சினிமாவில் எளிதாக கவனம் செலுத்த முடிகிறது.

ஆனால் எவ்வளவு காலம் படங்களில் நடிப்பேன் என தெரியாது.

என் கணவர் கெளதம் சினிமாவை விட்டு விலக சொல்லும் போது, படங்களில் நடிப்பதை நிறுத்துவேன்” என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நமது தளத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்த ஏழு திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது என்று பார்த்திருந்தோம்.

நடிகை காஜல் அகர்வால் நடித்த ஏழு திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது.

error: Content is protected !!