உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ 2 திரைப்படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்்.
சென்னை 19 மே 2021
உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ 2 திரைப்படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்.
.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் 2 திரைப்படத்தில் இருந்து, முக்கிய பிரபலம் விலகி உள்ளாராம்.
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் 232-வது திரைப்படம் ‘விக்ரம்’.2.
இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
நடிகர் உலக நாயகன் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த விக்ரம் 2 திரைப்படத்தை தயாரிக்கிறது.
இந்த விக்ரம் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் குறைந்த பின் திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முதல் திரைப்படத்தில் இருந்து ஒரே தொழில்நுட்ப குழுவுடன் தான் பணியாற்றி வருகிறார்.
தற்போது அவர் இயக்கத்தில் உருவாக உள்ள ‘விக்ரம்’ 2 திரைப்படத்திலும் அதே தொழில்நுட்ப குழுவுடன் தான் பணியாற்ற உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் விலகி உள்ளாராம். 
மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய சத்யன் சூரியன், கால்ஷீட் பிரச்சனை காரணமாக விக்ரம் 2 திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.
அவருக்கு பதிலாக விஜய்யின் சர்கார் திரைப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.











