தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் ‘எக்கோ’வில் ஆசிஷ் வித்யார்த்தி!
கடந்த 2015ல் தனுஷ் நடித்த ‘அநேகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆசிஷ் வித்யார்த்தி, அதையடுத்து கடந்த ஐந்த வருடங்களாக தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். வாய்ப்புகள் தேடிவந்தாலும் கூட, ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென்பதால் பல படங்களை தவிர்த்துவிட்டார்.
இந்தநிலையில் ஐந்து வருடங்கள் கழித்து தற்போது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘எக்கோ’ என்கிற படத்தில் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த ‘எக்கோ’வில் இதுவரை நாம் காணாத ஆசிஷ் வித்யார்த்தியை பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.
ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். தில், தூள், கில்லி, தடம் படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர்.
ECHO தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்
ஒளிப்பதிவு: கோபிநாத்
இசை: ஜான் பீட்டர்
எடிட்டிங்: சுதர்ஷன்
கலை: மைக்கேல் ராஜ்
நடனம்: ராதிகா
சண்டை பயிற்சி: டேஞ்சர் மணி
தயாரிப்பு நிர்வாகம் : BM சுந்தர்
மக்கள் தொடர்பு : KSK செல்வா
ஒப்பனை: ராமச்சந்திரன்
ஆடை வடிவமைப்பு: பாரதி
பாடல்கள் : ஏக்நாத்
மக்கள் தொடர்பு: கே எஸ் கே செல்வா
Related posts:
எக்கோ’வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ‘விஜய் தேவரகொண்டா’ நாயகி
நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசனுடன் இணைகிறார் பிரபல நடிகை ❗*
சித்த மருத்துவர் K .வீரபாபு இயக்கும் முடக்கருத்தான் புதிய படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் சிற்பி & பழனி பாரதி.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்த பிரபலங்கள்*
நடிகர் ஸ்ரீகாந்த் – நடிகை வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..!
எக்கோ’ திரைப்படத்தின் டீசரைபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்டார்கள். ..!
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி A.வெங்கடேஷ் இயக்கத்தில் “ரஜினி”
வீட்ல விசேஷம் படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும். – நடிகர் சத்யராஜ்!
கோலிவுட், பாலிவுட் என்று கலக்கிவரும் இயக்குநர் சுசிகணேசன் 2022 ம் ஆண்டு மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார்.
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் நடிகை விஜயசாந்தி


