சித்த மருத்துவர் K .வீரபாபு இயக்கும் முடக்கருத்தான் புதிய படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் சிற்பி & பழனி பாரதி.

சென்னை 16 ஜூலை 2021

சித்த மருத்துவர் K .வீரபாபு இயக்கும் முடக்கருத்தான் புதிய படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் சிற்பி & பழனி பாரதி.

கடந்த ஆண்டு கொரோனா அதிகரித்தபோது தமிழக சுகாதாரத் துறை மூலமாக சித்த மருத்துவர் K .வீரபாபு அழைக்கப்பட்டு அவர் மூலமாக 6000 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு மரணமின்றி குணப்படுத்தப்பட்டது .

மேலும் உழைப்பாளி உணவகம் என ஏழை மக்களுக்கு 10 ருபாய் விலையில் அவர் உணவளித்து மக்களால் போற்றப்பட்டார்.

தற்போது K .வீரபாபு ‘முடக்கருத்தான்’ எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார்.

இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய , சிற்பி இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார் .

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தொகுப்பினை ஆகாஷும் ,சண்டை பயிற்சியை சூப்பர் சுபராயனும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தின் இதர கதாபாத்திர தேர்வுகள் நடைபெற்று விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது .

தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து -இயக்கம் – K .வீரபாபு

தயாரிப்பு – வயல் மூவிஸ்

இணை இயக்குனர் – மகேஷ் பெரியசாமி

ஒளிப்பதிவு -அருள் செல்வன்

இசை -சிற்பி

தயாரிப்பு நிர்வாகம் – வேதா ரவி , ECR அன்பு

பாடல்கள் -பழனி பாரதி

படத்தொகுப்பு -ஆகாஷ்

சண்டை பயிற்சி -சூப்பர் சுப்பராயன்

கலை இயக்கம் – பிரபஞ்சன்

விளம்பர வடிவமைப்பு – ப்லெஸ்சன்

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே
அஹ்மத்