அஞ்சாமை’ திரைப்பட குழுவினர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரி சென்னை காவல்  ஆணையரிடம் புகார்!

அஞ்சாமை’ திரைப்பட குழுவினர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரி சென்னை காவல்  ஆணையரிடம் புகார்!

சென்னை 15 ஜூன் 2024 தமிழ் திரைப்பட உலகில் சமூக கருத்துக்களுடன் வரும் திரைப்படங்களுக்கு வெவ்வேறு விதங்களில் பிரச்சனை வருவது வழக்கமான ஒன்றே ஆகும்.

அவ்வாறே சமீபத்தில்  வெளியான நடிகர் விதார்த் நடிப்பில் அஞ்சாமை என்னும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் மீது சென்னை காவல் ஆணையரிடம்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அஞ்சாமை திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ஜூன் 07 தேதி அன்று வெளிவந்த நீட்டை பற்றி மாணவர்களுக்கு நடக்கும் கொடுமையை பற்றி வெளிவந்துள்ள திரைப்படமாகும்.

இந்த அஞ்சாமை திரைப்படத்தில் கதாநாயகனாக விதார்த், கதாநாயகியாக வாணி போஜன், ரஹ்மான் மற்றும் கிருத்திக் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இந்த நல்ல திரைப்படத்திற்கு புதியதாக  பிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளது.

இந்த அஞ்சாமை திரைப்படத்தை
திருச்சித்ரம் புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எஸ் பி சுப்புராமன் இயக்கத்தில் நடிகர்கள் விதார்த், ரஹ்மான், கிருத்திக் மோகன் நடிகை வாணி போஜன்  உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மக்களின் பேராதருடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும்  திரைப்படம் அஞ்சாமை.

‘நீட் தேர்வினால் மாணவ மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது  என்று பலரும் திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,  “நீட் தேர்வை பற்றி திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

“நீட் தேர்வை தடுக்கும் வகையிலும். நாடு முழுவதும் கலவரத்தை உண்டாக்கும் வகையிலும் உள்ள ‘அஞ்சாமை’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் ‘

அஞ்சாமை பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும்” என்று சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர், புகார் அளித்து உள்ளார்.

இந்த விஷயம் காட்டுத் தீவு போல் பரவி தமிழ் திரைப்பட உலகில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.