சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா இன்று துவங்கியது.!!

சென்னை 15 டிசம்பர் 2022 சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா இன்று துவங்கியது.!!

வரும் 22ம் தேதி வரை நடைபெறும் விழாவில் 51 நாடுகளை சேர்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது.

2003 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த விழாவில், பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று டிசம்பர் 15 துவங்கி டிசம்பர் 22ம் தேதி வரை நடக்கிறது.

சென்னை சத்யம் திரையரங்கில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் என மொத்தம் 5 திரைகளில், ஒரு நாளைக்கு 4 காட்சிகள் வீதம் 20 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

பல்வேறு மொழிகளை சேர்ந்த தி மைனர், தி ஹோட்டல், தி டிவைடு உள்ளிட்ட 75 படங்களும், தமிழ் திரைப்பட பிரிவில் ஆதார், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட 12 படங்களும், இந்தியன் பனோரமா பிரிவில் கடைசி விவசாயி உள்ளிட்ட 3 தமிழ் படங்கள் என மொத்தம் 15 தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளன.

மேலும் தரமணி அரசு திரைப்பட கல்லூரி மாணவர்களின் 9 குறும்படங்களும் இதில் திரையிடப்படுகின்றன.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு

home 2021

என்ற இணையதளத்தை சென்று பார்வையிடலாம்.