நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த D-பிளாக் திரைப் படத்தை வரும் ஞாயிறன்று ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்!!

சென்னை 11 செப்டம்பர் 2022  நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த D-பிளாக் திரைப் படத்தை வரும் ஞாயிறன்று ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்!!

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மர்மங்களும், ரகசியங்களும் கலந்த திரில்லர் திரைப்படமான D-பிளாக் திரைப்படத்தை வரும் ஞாயிறன்று ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்

செப்டம்பர் 11 இந்த ஞாயிறு பிற்பகல் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழில் இந்த அதிரடி ப்ரீமியர் ஒளிபரப்பை கண்டு ரசியுங்கள் ~

சென்னை, 11 செப்டம்பர் 2022: கடந்தகால நினைவுகளும், ஏக்கங்களும் மற்றும் விடுதியில் செலவழித்த மறக்க முடியாத தருணங்களும், எந்த காலத்திலும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க தகுந்தவை தான். ஆனால், அதுவே ஒரு அச்சம் ஏற்படுத்தும் பயங்கரமான நிகழ்வாக இருக்குமானால்? சில கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையைச் சுற்றி ஆபத்து தொடர்ந்து பின்தொடர்ந்து வருவதை திகைப்பில் ஆழ்த்தும் ஒரு திரைப்படத்தை சின்னத்திரைக்கு கொண்டு வருகிறது.

அர்த்தமுள்ள பொழுதுபோக்குச் சேனல் என்று புகழ்பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ், D- பிளாக் திரைப்படத்தினை உலகளவில் தொலைக்காட்சி சேனல்களில் முதன் முறையாக ஒளிபரப்பி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவிருக்கிறது.

செப்டம்பர் 11-ம் தேதி இந்த ஞாயிறன்று பிற்பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகர் அருள்நிதியும், நடிகை அவந்திகாவும் நடித்திருக்கின்றனர்.

இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத பதைபதைக்கும் பயங்கரத்தையும், திடுக்கிட வைக்கும் திருப்பங்களையும் கண்டு மிரள ஞாயிறு மதியம் 2:00 மணிக்கு தவறாமல் கலர்ஸ் தமிழை டியூன் செய்யுங்கள்.

அறிமுக இயக்குனர் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் இயக்குனரும், நடிகருமான கரு. பழனியப்பன், நடிகர் சரண்தீப், நடிகர் தலைவாசல் விஜய், நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் நடிகை உமா ரியாஸ்கான் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ரான் ஈதன் ரோஹன் மற்றும் கௌசிக் கிரிஷ் – ன் மனதை மயக்கும் பின்னணி இசையும், அற்புத திறன் கொண்ட பல நடிகர்களின் பங்களிப்பும் நிச்சயம் கண்டு ரசிக்க வேண்டிய திரைச்சித்திரமாக ஆக்கியிருக்கிறது.

கோயம்புத்தூரின் அடர்ந்த காடுகளை பின்புலமாக கொண்டிருக்கும் இதன் கதையில், ஒரு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் மர்மமான சூழ்நிலைகளில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்படுகின்றனர்.

கல்வி நிறுவனத்தின் பெயரைக் காப்பாற்றுவதற்காக அதன் நிர்வாகமும், அதிகாரிகளும் காட்டு விலங்குகளே இம்மரணங்களுக்கு காரணம் என்று பழிபோடுகின்றனர்.

இவர்களைச் சுற்றிய நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொள்ளும் அருள் (நடிகர் அருள்நிதி) மற்றும் அவரது நண்பர்கள் அந்த கல்லூரியைச் சுற்றி மற்றும் குறிப்பாக D- பிளாக் என்ற குறிப்பிட்ட கட்டிடத்தைச் சார்ந்த நடக்கின்ற மர்மத்தை கண்டறிய முற்படுகின்றனர்.

அவர்கள் அதிர்ச்சியில் உறையும் வண்ணம், ஒரு சைக்கோ சீரியல் கொலையாளி அவர்கள் மத்தியில் இருப்பதை இந்த இளைஞர்கள் கண்டறிகின்றனர்.

காலதாமதமாகி இன்னும் பலர் உயிரிழப்பதற்கு முன்னால் இந்த பயங்கர கொலையாளியை அருள் மற்றும் அவரது நண்பர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை திரைக்கதையின் எஞ்சிய பகுதி சித்தரிக்கிறது.

இத்திரைப்படத்தின் இயக்குனரும் – நடிகருமான விஜய் குமார் ராஜேந்திரன் இந்த தொலைக்காட்சி ப்ரீமியர் குறித்து கூறியதாவது:

“எனது முதல் படைப்பான இத்திரைப்படம், கலர்ஸ் தமிழ் போன்ற மக்களின் அபிமானம் பெற்ற பிரபல சேனலான கலர்ஸ் தமிழில் உலகத் தொலைக்காட்சி ப்ரிமியராக இடம்பெறுவது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

உளவியல் கருத்தாக்கம் சார்ந்த ஒரு சிறப்பான திரில்லர் திரைப்படத்தை ரசிகர்களுக்கு உருவாக்க வேண்டும் என்பதே பின்னணியிலிருந்த கண்ணோட்டமாகும்.

பார்ப்பவர்களை அவர்களது இருக்கையின் முனைக்கே இத்திரைப்படம் கொண்டு வந்து நிறுத்தும் என்பதில் ஐயமில்லை.

இளைஞர்கள் மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவருமே ஒன்றுசேர்ந்து இந்த த்ரில்லர் திரைப்படத்தை ரசிக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.”

இத்திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் அருள்நிதி பேசுகையில், “இத்திரைப்படத்தை ஒரு வெற்றி காவியமாக ஆக்குவதற்கு இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து நடிகர்களும் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகப்பெரிய முயற்சிகளை ஆர்வத்தோடு எடுத்திருந்தனர். திகில், நகைச்சுவை, திரில்லர் மற்றும் ஆக்‌ஷன் என பல்வேறு ஜர்னர்களில் நான் நடித்திருக்கிறேன்; ஆனால், ரகசியங்களை வெளிக்கொணர ஒரு மர்மமான புலன்விசாரணையில் ஈடுபடுகின்ற ஒரு கல்லூரி மாணவனாக நடித்தது உண்மையிலேயே முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாகும். இந்த வாரஇறுதி நாட்களில் தவறவிடாமல் பார்க்க வேண்டிய, மனதை ஈர்க்கும் ஒரு திரைப்படமாக மர்மங்களும், திகிலும் நிறைந்த இத்திரைப்படம் இருக்கும் என்பது நிச்சயம். தங்கள் அன்புக்குரியவர்களோடு ஒன்றுசேர்ந்து வீட்டில் சுவாரஸ்யமாக பார்த்து மகிழும் திரைப்படமாக D- பிளாக் வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

கலர்ஸ் தமிழில் இந்த ஞாயிறு செப்டம்பர் 11, பிற்பகல் 2:00 மணிக்கு, சஸ்பென்ஸ், அதிரடி திருப்பங்கள் மற்றும் மர்மம் நிறைந்த D- பிளாக்கின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரை கண்டு ரசியுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

error: Content is protected !!