நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி வருகிறது!!!

சென்னை 21 ஆகஸ்ட் 2022 நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி வருகிறது!!!

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி.

நடிகர் கார்த்தி நடிப்பில் நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் தயாரித்து வெளியாகி மிகப்பெரிய ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் விருமன்.

இயக்குனர் பி ஜி முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் இயக்குனர் இமயம் பாரதிராஜா, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, மனோஜ் பாரதிராஜா, அருள் தாஸ், ஆர்.கே. சுரேஷ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கருணாஸ், சிங்கம்புலி, வாசு மித்திரன், ராஜ்குமார், இந்துமதி, நந்தினி, ஏ.கே சுந்தர், அருந்ததி, ரிஷி, இந்திரஜா ரோபோ சங்கர்,
உட்பட பலர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கிராமத்து கதை களத்தை மையமாகக் கொண்டு குடும்ப உறவுகளை பேசும் திரைப்படமாக வெளியான இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வரை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வெற்றி விருமன் திரைப்பட படக்குழுவினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்படுகிறது.