‘ஜோஷ்வா : இமை போல் காக்க’ திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- வருண், ராஹே, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், திவ்யதர்ஷினி, விசித்ரா, கிட்டி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கௌதம் வாசுதேவ் மேனன்.
ஒளிப்பதிவாளர் :- எஸ்.ஆர் கதிர் ஐஎஸ்சி.
படத்தொகுப்பாளர் :- ஆண்டனி,.
இசையமைப்பாளர் :- கார்த்திக்.
தயாரிப்பு நிறுவனம் :- வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்.
தயாரிப்பாளர் :- ஐசரி கே. கணேஷ்.
லண்டனை சேர்ந்த கதாநாயகன் வருண் அமெரிக்காவைச் சேர்ந்த கதாநாயகி ராஹேவும் சென்னையில் நடக்கும் விழாவில் சந்தித்துக் கொள்ள நட்பாக பழகும் இவர்களுக்குள் காதல் மலர்கிறது.
கதாநாயகி ராஹேவிடம் நான் யார் என்ற கதாநாயகன் வருண் தான் செய்யும் தொழில் மற்றும் உண்மையை கூறும்போது கதாநாயகி ராஹே பயந்துபோய் கதாநாயகன் வருணை விட்டு பிரிந்து அமெரிக்காவிற்க்கு சென்றுவிடுகிறார்.
இதற்கிடையே தன்னை பிரிந்து சென்ற காதலி கதாநாயகி ராஹேவின் உயிருக்கு சர்வதேச குற்றவாளிகள் மூலம் மிகப்பெரிய ஆபத்து ஒன்று வருகிறது.
தனது காதலி கதாநாயகி ராஹேவின் உயிரை காப்பாற்றுவதற்காக தன் உயிரை பற்றி கூட கவலைப்படாமல் தன் உயிருக்கு உயிரான காதலியை காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்குகிறார் கதாநாயகன் வருண், தனது காதலி கதாநாயகி ராஹே சர்வதேச குற்றவாளிகளின் இருந்து காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? கதாநாயகன் வருண் கதாநாயகி ராஹே இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? தனது காதலி கதாநாயகி ராஹேவை எதற்காக கொலை செய்வதற்கு துரத்தியிருக்கிறார்கள் என்பதுதான் ஜோஷ்வா : இமை போல் காக்க’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஜோஸ்வா இமை போல் காக்க திரைப்படத்தில் கதாநாயகனாக வருண் நடித்திருக்கிறார்.
ஜோஸ்வா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வருண், இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் கடுமையாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் மிகத் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இந்தத் திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் ஓவ்வொரு விதத்தில் சவால் நிறைந்ததாக இருந்தாலும், அதை மிக சிறப்பாக கையாண்டிருக்கும் கதாநாயகன் வருண், சண்டைக்காட்சிகளுக்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளில் தனது திறமையை நிரூபித்திருக்கும் கதாநாயகன் வருண், தனக்கு கொடுக்கப்பட்ட ஜோஸ்வா என்ற கதாபாத்திரத்தை சிறிதளவும் குறையின்றி செய்து, தன்னை முழுமையான ஆக்ஷன் கதாநாயகனாக தன்னை நிரூபித்திருக்கிறார்.
இந்த ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படத்தில் கதாநாயகியாக ராஹே நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ராஹே, பல அழுத்தமான காட்சிகளில் சிறப்பாக நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் பாராட்டு பெறுகிறார்.
தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே காதல், பயம் என ஆகிய பல விதமான உணர்வுகளை தனது கண்களின் மூலமாகவே நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்து விடுகிறார்.
இந்த ஜோஸ்வா இமைப்போல காக்க திரைப்படத்தை வில்லனாக நடிகர் கிருஷ்ணா நடித்திருக்கிறார்.
திடீர் எண்ட்ரி கொடுக்கும் கிருஷ்ணாவின் கதாபாத்திரம் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
வில்லனாக நடித்திருக்கும் கிருஷ்ணாவுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
சர்வதேச கூலிப்படையை கண்ட்ரோல் பண்ணும் கதாபாத்திரத்தில் திவ்யதர்ஷினிபா என நினைக்க தோன்றுகிறது.
அதன் பிறகு திவ்யதர்ஷினி வரும் காட்சிகளில் தனது நடிப்பு மூலம், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திவிடுகிறார்.
கதாநாயகி ராஹேவின் தந்தையாக நடித்திருக்கும் கிட்டி, இறுதிக்காட்சியில் வந்தாலும், தனது அனுபவ நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துவிடுகிறார்.
மன்சூர் அலிகான், மற்றும் மன்சூர் அலிகான் மனைவியாக வரும் விசித்ரா ஒரு சில காட்சியில் மட்டுமே வருகிறார்கள்.
இந்த ஜோஷ்வா இமைப்போல் காக்க திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிக அருமையாக நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக ஒளிப்பதிவு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் கார்த்திக் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை மூலம் மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி படத்தொகுப்பு பணி திரைப்படத்திற்கு கூடுதல் சிறப்பு.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள்.
மிகவும் எளிமையான கதையின் கருவை எடுத்துக்கொண்டு திரைக்கதையின் மூலம் ஒரு சர்வதேச அளவிலான ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், இரண்டரை மணி நேரம் பத்து நிமிடம் நம்மை ஆக்ஷன் திரைப்படத்தில் மூழ்கடித்தாலும், மூச்சுத் திணறாமல் அதை வித்தியாசமான முறையில் கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஜோஷ்வா : இமை போல் காக்க’ ஆக்ஷன் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு திரைப்படம்.