நெல்லை சந்திப்பு படத்தின் இயக்குனர் கே.பி.பி.நவீன் தற்போது நடிகராக களம் இறங்கி இருக்கிறார் !

நெல்லை சந்திப்பு படத்தின் இயக்குனர் கே.பி.பி.நவீன் தற்போது நடிகராக களம் இறங்கி இருக்கிறார் !

சென்னை 14 அக்டோபர் 2024; இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் பல திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் பணியாற்றிய கே. பி. பி. நவீன் நெல்லை சந்திப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநராக அறிமுகமானார்.

நெல்லை சந்திப்பு, உத்ரா இரண்டு திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமான சகாப்தம் திரைப்படத்தின் கதை ஆசிரியராக நவீன் பணிபுரிந்தார்.

தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான
கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் யோகி பாபு காம்பினேஷனில் திரைப்படம் முழுக்க வரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பை பார்த்து இயக்குனர் சீனுராமசாமி நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வருவீர்கள் என வாழ்த்தியது மறக்க முடியாது என கூறினார்.

தொடர்ந்து இயக்குனர் எழில் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்திலும் மற்றும் வேல் குமரேசன் அவர்கள் இயக்கும் வசூல் மன்னன், ரிஷிராஜ் அவர்கள் இயக்கும் காட்டான் போன்ற திரைப்படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் நவீன்.

error: Content is protected !!