நடிகர் அஜித்குமார், தற்போது 25 லட்சம் ரூபாய் தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்.
சென்னை 14 மே 2021
நடிகர் அஜித்குமார், தற்போது 25 லட்சம் ரூபாய் தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றை எதிர்கொள்ள தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ் திரைப்பட துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த
மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் நோய் தொற்றை எதிர்கொள்ள தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு தமிழ்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை அடுத்து நடிகர் சிவக்குமார், சூர்யா கார்த்தி ஜோதிகா குடும்பத்தினர் சார்பாக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி இருந்தனர்.
அதே போல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி இருந்தார்.
நடிகரும், தயாரிப்பாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், தற்போது ரூ.25 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கி இருக்கிறார்.
முதலில் அவர் 2.5 கோடி வழங்கியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், நடிகர் அஜித்குமார் 25 லட்சம் ரூபாய் பேங்க் மூலம் கொடுத்ததாக அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
Official announcement pic.twitter.com/XsQ6yMnx3k
— Suresh Chandra (@SureshChandraa) May 14, 2021
Shri Ajith kumar had donated twenty five lakhs to the Chief minister relief fund today via bank transfer.
— Suresh Chandra (@SureshChandraa) May 14, 2021











