பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா இன்று மாரடைப்பினால் காலமானார்.

சென்னை 11 மே 2021

பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா இன்று காலமானார்.

தமிழ் திரைப்பட உலகில் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களை கவர்ந்த நெல்லை சிவா இன்று மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு தற்போது வயது 69

தமிழ் திரைப்பட உலகில் ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி  பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் நெல்லை சிவா.

இவர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் வடிவேலுவுடன் இணைந்து கிணத்தை காணோம் காமெடி ரசிகர் மத்தியில் மிகவும் ரசிக்க வைத்த காமெடியாக இருந்தது.

இவர் தற்போது சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் தற்சமயம் நடித்து வருகிறார்.

இன்று மதியம் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு  திருமணம் செய்து கொள்ளவில்லை அவரின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் அவருடைய அண்ணன் பிள்ளைகள்தான் நாளை அவருடைய இறுதி சடங்கை நடத்துகிறார்கள்