தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களே வியந்து பாராட்டிய அமைச்சர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
நிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை ஒரு பக்கம் பலத்த காற்று ஒரு பக்கம் முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் ஒருபக்கம் என சென்னைவாசிகளை பல முனைகளிலும் நின்று தாக்குகிறது இயற்கை.
இந்த சூழலில் வீடுகளை இழந்தோர் உணவில்லாமல் தவிப்போர் தத்தளிக்கும் மீனவர்கள் ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் களத்தில் நிற்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர்.
தன் சொந்தப் பணத்தைக் கொண்டு பல்வேறு உதவிகளை இரண்டு நாட்களாக செய்து வருகிறார்.
அவர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ரெயின் கோட் அணிந்து தண்ணீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று குறைகளை கேட்பதும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பத்திரமாக முகாம்களுக்கு அனுப்பி வைப்பதும், உணவு சமைத்து தானே விநியோகம் செய்வதும் அத்தியாவசிய பொருட்களை அள்ளிக் கொடுப்பதும் இந்த அமைச்சரின் வாடிக்கையான விஷயமாக மாறியிருக்கிறது.
காரில் வலம் வந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு மத்தியில் மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அழைத்து அதற்கு தீர்வு காண்பது என பல தளங்களில், களங்களில் நின்று பணியாற்றி வருகிறார் அந்த அமைச்சர்.
அவரது உதவும் மனப்பான்மை முதலமைச்சரின் பார்வைக்கு எப்படியோ சென்றிருக்கிறது.
இதையடுத்து உடனடியாக அந்த அமைச்சரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டு தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் இவரது செயலை பலரும் அறிய வேண்டும் என்பதற்காக பொது வெளியில் அதாவது முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர்.
ஆம் அந்த அமைச்சர் யார் என்பது தானே உங்கள் அனைவரது கேள்வியாக இருக்கிறது? வேறு யாருமல்ல எப்போதும் மக்களோடு மக்களாகவே பயணிக்கும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் அமைச்சர், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர் என தேர்தலையும் மக்கள் மனதையும் சேர்த்தே வென்ற அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்தான்.
அமைச்சரின் தாரக மந்திரம் தர்மம் தலைகாக்கும் என்பதுதான்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தொடர்ந்து செய்து வரும் மாண்புமிகு அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் pic.twitter.com/feIPNcpF60
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 26, 2020
நிவர் புயல் பாதிப்பிலிருந்து பொது மக்களை காக்கும் வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள..அதிகன மழையையும் பொருட்படுத்தாமல் களப் பணியாற்றும் @OffiofDJ அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் pic.twitter.com/HwoG2WCtxD
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 25, 2020












