பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்தின் மரணம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவு.
சென்னை 30 ஏப்ரல் 2021
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி. ஆனந்தின் மரணம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நடிகர் ரஜினிகாந்த்
டுவிட்டரில் பதிவு.
பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த்தின் மரணம் பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
நேற்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் தானே காரை ஓட்டிசக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
பின்பு அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது
இதையடுத்து அவரது உடல் இன்று காலை 9 மணிக்கு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்
மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.
— Rajinikanth (@rajinikanth) April 30, 2021











