பிரண்ட்ஷிப் ” படம் மூலம் நண்பர்களாகிய ஹர்பஜன் சிங் & சிம்பு !!

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் ” படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .

ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் லாஸ்லியா, சதிஷ் , JSK சதீஷ்குமார், வெங்கட் சுபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .

பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவராக நடிக்கும் ஹர்பஜன் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் தற்போது இப்படத்தின்  ” Superstar  anthem ” என்ற முதல் பாடலை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார்.

நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார் . அறிமுக இசைஅமைப்பாளர் DM உதயகுமார் இசையமைத்துள்ளார் .

சிம்பு தொலைபேசியில்  ஹர்பஜனுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

மேலும் பாடல் சிறப்பாக உருவாகியிருக்கிறது , திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என வாழ்த்தியுள்ளார் .

இதற்கு பதிலளித்த ஹர்பஜன் ” எனக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பனாக கிடைத்துள்ளீர்கள் . சென்னையில் நாம் இருவரும் விரைவில் சிந்திப்போம்”என கூறியுள்ளார் .

பிரண்ட்ஷிப் திரைப்படம் இந்திய மொழிகளில் விரைவில்  வெளியாக இருக்கிறது .

தொழிநுட்பக்குழு :
இயக்கம் – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா

தயாரிப்பு – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா

இணைத்தயாரிப்பு – வேல்முருகன்

ஒளிப்பதிவு – சாந்த குமார்

இசை – DM உதயகுமார்

படத்தொகுப்பு – தீபக் S தவாரக்நாத்

கலை இயக்கம் – மஹேந்திரன்

வசனம் – PS ராஜ்

சவுண்ட் டிசைன் – ஆனந்த் ( 4Frames )

நடனம் – ஷாம் சூர்யா

ஆடை வடிவமைப்பு – வசந்த்

ஸ்டில்ஸ்- சிவா

நிர்வாக தயாரிப்பு – ரோபின்

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

 

error: Content is protected !!