முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் திரையுலக பிரபலங்கள் வரை… எல்.கே. சுதீஷ் மகள் டாக்டர் ஜானுஸ்ரீ அகில் ரவிக்குமார் நிச்சயதார்த்தம் கோலாகலம் !
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் திரையுலக பிரபலங்கள் வரை… எல்.கே. சுதீஷ் மகள் டாக்டர் ஜானுஸ்ரீ அகில் ரவிக்குமார் நிச்சயதார்த்தம் கோலாகலம் !
சென்னை 30 ஆகஸ்ட் 2026 தேமுதிகவின் பொருளாளரும், ராஜ்யசபா எம் பியும் ஆன எல் கே சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி அவர் மூத்த மகள் டாக்டர்.ஜானு ஸ்ரீ, தொழிலதிபர் துட்டு குறி ரவிக்குமார் மற்றும் ராதா ரவிக்குமார் மகன் அகில் ரவிக்குமார் ஆகியோரின் நிச்சயதார்த்தம் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் மற்றும் தேமுதிகவின் பொதுச் செயலாளரும், விருத்தாச்சலம் தொகுதியின் எம்எல்ஏ ஆன பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகனும் தேமுதிகவின் இளைஞர் அணிச் செயலாளருமான விஜய பிரபாகரன், இளைய மகன் நடிகர் சண்முக பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, மா சுப்பிரமணியம், சைதை துரைசாமி, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ்,சேவியர் பிரிட்டோ, கண்ணன் ரவி, பஞ்சு சுப்பு, நடிகர் சதீஷ்,இயக்குனர் திரு, மணி சேயோன், விஐடி செல்வம், முன்னாள் ஐஜி சேகர் கலந்து கொண்டனர்.











