நடிகர் பொன்வண்ணன் – நடிகை சரண்யா தம்பதியரின் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர்.

சென்னை 06 ஜூலை 2021

நடிகர் பொன்வண்ணன் – நடிகை சரண்யா தம்பதியரின் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர்.

திரைப்பட நடிகர் பொன்வண்ணன் – நடிகை சரண்யா தம்பதிகளின் மகள் பிரியதர்சினியின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.

பொன்வண்ணன் – நடிகை சரண்யா தம்பதிகளின் மகள் பிரியதர்சினியின் திருமண வரவேற்புக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

தமிழ் திரைப்பட உலகில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்கள் பொன்வண்ணன் மற்றும் சரண்யா.

இவர்களின் மகளான பிரியதர்ஷினிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் தமிழ் திரைப்பட உலக நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் நடிகர் தயாரிப்பாளர் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.