கிரீன்பார்க் ஓட்டல் பிரியாணி விவகாரம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய கரப்பான் பூச்சி சர்ச்சை!

கிரீன்பார்க் ஓட்டல் பிரியாணி விவகாரம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய கரப்பான் பூச்சி சர்ச்சை!

​சென்னை 08 ஆகஸ்ட் 2026 சென்னை வடபழனியில் உள்ள புகழ்பெற்ற கிரீன்பார்க் ஓட்டலில் (Green Park Hotel) நடைபெற்ற “மகுடம்” திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், பத்திரிகையாளர்களுக்கு மற்றும் ஊடக நண்பர்கள் பரிமாறப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

​நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள “மகுடம்” திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 7, 2026 அன்று மாலை 06 மணியளவில் வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் கோலாகலமாகத் தொடங்கியது.

​இந்நிகழ்ச்சியில் நிரைப்படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஏராளமான பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, நிறைவடைந்ததும், கலந்துகொண்ட அனைவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் “மகுடம்” திரைப்படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

​பத்திரிகையாளர்களுக்குப் மற்றும் ஊடக நண்பர்கள் இரவு உணவில் பரிமாறப்பட்ட  (பிரியாணி), கரப்பான் பூச்சி கிடந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது.

நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு முன்னணி நட்சத்திர ஓட்டலில், அதுவும் ஊடகவியலாளர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவில் இத்தகைய அநாகரீகமான மற்றும் சுகாதாரமற்ற நிகழ்வு அரங்கேறியிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

​நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல்களில்கூட உணவின் தரமும் சுகாதாரமும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதை இந்தச் சம்பவம் அப்பட்டமாகக் காட்டுகிறது.”

​திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் இயக்குனர்களுக்கு இனிவரும் காலங்களில் இதுபோன்ற தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற ஓட்டல்களில் திரைப்பட விழாக்களுக்கான உணவு ஏற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே பலரின் ஒட்டுமொத்தக் குரலாக உள்ளது.

நட்சத்திர அந்தஸ்து உள்ள  ஓட்டல்களிலேயே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன என்ற கேள்வியெழுந்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் உடனடியாகத் தலையிட்டு இதுபோன்ற ஓட்டல்களில் அதிரடி ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் அனைவரின் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

error: Content is protected !!