தனது மகளை கணவர் அடித்துக் கொன்று விட்டதாக சின்னத்திரை நடிகை சித்ராவின் தாய் கூறியது மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் நடிகை சித்ரா.
அதனைத் தொடர்ந்து ஜெயா டிவி ஜீ தமிழ் உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
மேலும் சரவணன் மீனாட்சி (சீசன் 2)’ சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா.
இவர் நேற்று இரவு சின்னத்திரை படப்பிடிப்பு முடித்து விட்டு ஹோட்டல் ரூமுக்கு இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஈவிபி பிலிம் சிட்டியில் உள்ள ஹோட்டல் ரூமுக்கு வந்துள்ளார்.
அந்த ஹோட்டல் ரூமில் தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் ஒன்றாக தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், ஹோட்டல் ஊழியர் அந்த ரூம் மாற்று சாவி எடுத்து வந்து திறந்து பார்த்தபோது நடிகை சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் நேற்று தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் நடிகை சித்ரா.
அவருடைய மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று அவரது பிரேத பரிசோதனை நடைபெற்றது.
தனது மகளை அவரது கணவரான ஹேம்நாத் ரவி அடித்துக் கொன்றுவிட்டதாக சித்ராவின் தாய் கதறியழுதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஹேம்நாத் ரவியை பெற்றோர் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டார் நடிகை சித்ரா.
வரும் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவருடைய முகத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவரது உடல் பல சந்தேகத்தை ஏற்படுத்தியது.
தனது கணவரான ஹேம்நாத் ரவி உடன் தங்கியிருந்த போது அவரை வெளியே அனுப்பிவிட்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கூறப்பட்டது.
அவர் தற்கொலை செய்திருந்தால் எப்படி முகத்தில் காயம் ஏற்பட்டது என பல கேள்விகள் எழுந்துள்ளது.
அவரது மரணம் உண்மையிலேயே தற்கொலைதானா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சித்ராவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது அவரது உடல் பெற்றோர் இடத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மகளின் உடலை பார்த்த அவரது தாயார் எனது மகள் கோழையில்லை.
அவளை அடித்து கொன்றுவிட்டான் அவரை தைரியமனாவராகதான் வளர்த்தேன் என கதறியழுதார்.
செவ்வாய்க்கிழமை இரவு என்னிடம் போனில் பேசும்போது நன்றாகத்தான் பேசினாள்.
வரும் பிப்ரவரி 10 ஆம் திருமணம் திங்கள் கிழமைதான் மண்டபத்தை பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தோம்.
அதற்குள் இப்படி செய்யும் அளவுக்கு அவள் கோழையில்லை.
என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கொலையா? தற்கொலையா? என்பதை காவல் துறையினர் தான் உண்மையை கண்டறிய வேண்டும்.