Thursday, January 28
Shadow

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் மாநிலச் செயலாளராக எனக்கு வாய்ப்பளித்த தலைவர் தளபதி அவர்களுக்கும், தலைமைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – கார்த்திகேய சிவசேனாபதி

சென்னை : 23 நவம்பர் 2020

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் இந்திய நாட்டிலேயே முதன் முறையாகச் சுற்றுச்சூழலுக்காக ஒரு தனி அணியை உருவாக்கி நமக்கெல்லாம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை மிகத்தெளிவாகக் காண்பித்துள்ளார் .

பல்லாயிரம் வருடங்களாகத் தமிழர்கள் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாத்து அதனோடு இணைந்த வாழ்வியல் முறையைக் கொண்டவர்கள்.

குறிப்பாகத் தொல்காப்பியத்திலே திணைகளைப் பற்றிய விளக்கம் சான்றுகளாக குறிப்பிடப்பட்டிருக்கிறது .

தமிழர்களுடைய சுற்றுச்சூழல் அறிவு தொல்காப்பியம் தொடர்ந்து சங்க இலக்கியத்திலும், திருக்குறளிலும் வெளிப்படுகிறது.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.”- குறள் 322

ஏன் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க வேண்டும், நீராதாரங்களையும், மழை நீர் சேகரிப்பையும் உருவாக்க வேண்டும் என விளக்குகிறது.

பெரும் முதலாளிகளுக்காக சுற்றுச்சூழல் சட்டங்களை மாற்றி சுற்றுச்சூழலுக்கும் அதனால் சாமானிய மக்களுக்கும் நேரக்கூடிய அழிவு மிகவும் ஆபத்தானது என்பதை உணர்ந்த வகையிலே திராவிட முன்னேற்றக் கழகமும் ,கழகத்தின் தலைவர் திரு.தளபதி அவர்களும் சுற்றுச்சூழலுக்கு ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு முதல் செயலாளராக என்னை நியமித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது.

தலைவர் அவர்கள் என் மீது கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைக்கு என்னால் இயன்றதைப் பாடுபட்டு தலைவர் அவர்களின் தலைமையின் கீழ் தமிழகத்தைப் பசுமையான சுற்றுச்சூழல் நிறைந்த மாநிலமாக, இந்தியாவின் முன்னோடியாக மாற்றி அமைக்க தளபதியின் வழிகாட்டுதலில் பாடுபடுவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .

அனைத்து தமிழ் சமுதாயத்துடன் ஒற்றுமையுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த அனைவரையும் தளபதியின் தலைமையின் கீழ் ஒன்றிணைய வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் .

சுற்றுச்சூழல், நீராதாரங்கள் மேம்பாடு, மரம் வளர்ப்பு, என இயற்கையின் மீது அளப்பறியா ஆர்வம் கொண்ட அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் .

தலைவர் கைகளை வலுப்படுத்தி வலிமையான பசுமையான தமிழகத்தை உருவாக்குவோம் .

நூறு வருடங்களுக்கு முன்பு திராவிட இயக்கம் எப்படி சமூக நீதி, கல்வி, பொருளாதார மேம்பாடு, போன்றவற்றை எல்லாம் தமிழக மக்களுக்குத் தேவை என்று உணர்ந்து பணியாற்றியதோ அதே போல் இன்றைய காலத்திற்கு ஏற்ப தேவையான முன்னெடுப்புகளை எடுப்பதற்கு இந்திய நாட்டிலேயே உள்ள ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மறுபடியும் தலைவர் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

இந்திய நாட்டிலேயே சுற்றுச்சூழலுக்குத் தனியாக ஒரு அமைப்பை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகமே .

இனிமேல் அனைத்து கட்சிகளும் இதனைக் கண்டு சுற்றுச்சூழலுக்கு ஒரு அமைப்பை உருவாக்க முன்வருவார்கள் என்பது நாம் அறிந்தது தான் என்றாலும் அதை முதன்முறையாக ,முன்னோடியாக எடுத்துச் செய்தது தலைவர் அவர்களுடைய பண்பையும், தொலைநோக்குப் பார்வையையும் காட்டுகிறது.

Read Also  முதல்வர் ஜெயலலிதா அவர் காரில் கடந்து செல்வதை மக்களுடன் நான் சாலையில் நின்று அவரை பார்த்திருக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் மாநிலச் செயலாளராக எனக்கு வாய்ப்பளித்த தலைவர் தளபதி அவர்களுக்கும், தலைமைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதன் மூலம் அயராது தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பாடுபட்டு தலைவர் தளபதி வழிகாட்டுதலில் தமிழகத்தைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னோடி மாநிலமாக உயர்த்திடவும் உறுதி அளிக்கின்றேன்.

CLOSE
CLOSE