இரவினில் ஆட்டம் பார் ‘ ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் நவம்பர் 8 முதல் உலகமெங்கும் வெளியாகிறது !
இரவினில் ஆட்டம் பார் ‘ ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் நவம்பர் 8 முதல் உலகமெங்கும் வெளியாகிறது !
சென்னை 22 அக்டோபர் 2024 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் நவராத்திரி படத்தில் இடம்பெற்ற ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ‘ என்ற பாடல் திருடர்களின் திரை மறைவு வாழ்வைக் காட்டும்.
அந்தப் பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் ‘இரவினில் ஆட்டம் பார் ‘என்கிற பெயரில் ஒரு முழு நீள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றம் செய்பவர்களையும், பள்ளி மாணவர்களைப் போதை மருந்துக்கு அடிமையாக்கும் நாசக்காரக் கும்பலையும் எதிர்த்து ஒரு நிழல் கதாநாயகன் இரவினில் ஆடும் ஆட்டம் தான் இந்தப் படம்.அந்தக் காமக் கொடூரர்களையும் போதை அடிமைக் கொடியவர்களையும் மர்மமான முறையில் அழித்து ஒழிக்கும் கறுப்பு நாயகன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். படத்தின் முழுக்கதையும் இரவில் நடக்கிறது.
இந்தப் படத்தை ஆர் எஸ் வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர். சேகர் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியுள்ளார் ஏ. தமிழ்ச்செல்வன்.
இப்படத்தின் கதை நாயகனாக உதயா என்கிற உதயகுமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகன் நிலையில் மாரா ராஜேந்திரன் நடித்துள்ளார். நாயகியாக கிரேசி வருகிறார்.
இவர் சன் டிவியில் வரும் மல்லி, திருமகள் தொடர்களில் நாயகியாக நடித்து வருபவர். இவர்கள் தவிர பருத்தி வீரன் சரவணன், அஸ்மிதா, ஈஸ்வரன், அடையாளம் பாண்டு, சி.எம். துரை ஆனந்த் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஜினோபாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். நல்லதம்பி இசையமைத்துள்ளார் பாடல்கள் -செல்வராஜா . சண்டைக் காட்சிகளுக்கு எஸ். ஆர். ஹரிமுருகனும் நடனத்திற்கு ஸ்டைல் பாலாவும் பொறுப்பேற்றுள்ளனர்.படத்தொகுப்
சேலம் ஏற்காடு பகுதியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடித்துள்ளார்கள்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘கருங்கூந்தல் அழகுக்காரி ‘பாடல் சமூக ஊடகங்களில் பிரபலமாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளிப் பண்டிகை தாண்டி நவம்பர் எட்டாம் தேதி ‘இரவினில் ஆட்டம் பார் ‘ திரைப்படம் வெளியாகத் தயாராக உள்ளது.
Related posts:
நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் “வேழம்” திரைப்படம் ஜூன் 24 2022 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!
‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று முதல் இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது !
நடிகர் ஆர்யா நடிப்பில் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்படம் உலகமெங்கும் 2023 ஜீன் 2 ஆம் தேதி திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.!
நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது !!
நடிகர் விமல் நடிப்பில் குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் “குலசாமி” திரைப்படம் மே 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.!!
“தலைவி” திரைப்படம் செப்டம்பர் 10 முதல் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் ரியோ ராஜ் நடிகை ரம்யா நம்பீசன் நடிப்பில் பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படம் செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் வெளியாகிறது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது!
பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது !!

