நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்கா?
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்கா?
சென்னை 01 ஜனவரி 2026 தளபதி விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு நடிகர் பாலையா நடித்த பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் என வதந்தி பரவி வருகின்றன.
இது தொடர்பாக ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார்கள்
அதற்கு ஜனநாயகன் நடிகர் தளபதி விஜய் திரைப்படம் என்று இயக்குநர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் திரைப்படம் வெளியாகும் வரை அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நடிகர் தளபதி விஜய் நடிக்கும் கடைசித் திரைப்படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்பது திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்த பின்புதான் தெரியவரும்.
வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தளபதி விஜய் அவர்களை சந்தித்து பேசி உள்ளேன் விஜய் அவர்கள் மிகவும் ஒரு அற்புதமான மனிதர் என இயக்குனர் அனில் ரவிப்புடி தெரிவித்துள்ளார்.











