நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ரூட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுகிறார்!

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ரூட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுகிறார்!

சென்னை 01 ஜனவரி 2026 ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக உருவாகி வரும் இந்த ‘ரூட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டு தினமான இன்று காலை 11 மணிக்கு, அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிடுவார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த ரூட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த ரூட் திரைப்படத்தில் நடிகை பவ்யா திரிகா, கதாநாயகியாக நடிக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் ‘ரூட் ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ திரைப்படத்தின் இயக்குனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய சூரியபிரதாப் இந்த ரூட் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக திரைப்படமாக உருவாகி வருகிறது.

சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில்  திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் ‘ரூட்’ திரைப்படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!