தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த “நானகு பிரேமதோ” படத்தின் கதைதான் வாரிசு” திரைப்படத்தின் கதை.!!
சென்னை 11 ஜனவரி 2023 தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த “நானகு பிரேமதோ” படத்தின் கதைதான் வாரிசு” திரைப்படத்தின் கதை.!!
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் வெளிவந்துள்ள ”வாரிசு” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 இன்று வெளியாகி இருக்கிறது.
இந்த வாரிசு திரைப்படம் குடும்பப்பாங்கான கதை உள்ள திரைப்படம்தான் அனைவரும் குடும்பத்தினருடன் கண்டு ரசிப்பார்கள் எனவும், திரைப்படம் வெளி வருவதற்கு முன்பு தயாரிப்பாளர் தில்ராஜ் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார்.
நடிகர் விஜய் நடிப்பில் இந்த வாரிசு திரைப்படத்தை பார்த்த பிறகுதான் தெரிகிறது.
இந்த வாரிசு போல் கதையம்சம் உள்ள திரைப்படம் போல தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2016 அன்டு வெளிவந்த “நானகு பிரேமதோ” என்ற திரைப்படத்தின் தழுவல் தான் தற்போது தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள “வாரிசு” திரைப்படத்தின் கதை.
நடிகர் ராஜேந்திர பிரசாதிற்க்கு இரண்டு மூத்த மகன்கள் வீட்டைவிட்டு வெளியேறி விடுவார்கள்.
மூன்றாவதாக உள்ள இளைய மகன் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், வில்லன் ஜெகபதி பாபுவின் மகள் ராகுல் ப்ரீத் சிங்கை காதலித்து தன் தந்தையை ஜெயிக்க வைத்து விடுவர்.
வீட்டை விட்டு சென்ற
இரண்டு அண்ணன்களையும் ஜூனியர் என்டிஆர் வீட்டிற்கு அழைத்து வருவார்.
அதன்பிறகு தந்தை ஜெகபதி பாபு இறந்து விடுவார்.
“வாரிசு” திரைப்படத்தில்
சரத்குமாரின் இரண்டு மூத்த மகன்களும் வீட்டைவிட்டு சென்று விடுவார்கள்.
மூன்றாவதாக உள்ள இளைய மகன் விஜய், வில்லன் பிரகாஷ் ராஜ் ஏற்பாடு செய்த பைனான்ஸியர் எஸ் ஜே சூர்யா மூலமாக தந்தையை ஜெயிக்க வைப்பார்.
பின்னர் இரண்டு மூத்த மகன்களையும் விஜய் வீட்டிற்கு அழைத்து வருவார்.
அதன்பின் தந்தை சரத்குமார் இறந்து போகிறார்.
இதற்கு முன் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஏற்கனவே வெளியான திரைப்படங்களின் கதை என்று பேசப்பட்டது.
அந்த திரைப்படத்தின் இயக்குனர்கள் விமர்சனத்துக்கு உள்ளானதும் உண்டு.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், அட்லி வரிசையில் வாரிசு திரைப்படத்தின் இயக்குனரும் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த வாரிசு திரைப்படம் திருட்டு கதையா இல்லை மொழிமாற்று திரைப்படமா இதைப் பற்றி இயக்குனருக்கு மட்டும் தான் வெளிச்சம்.