’காந்தா’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ , ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பிஜேஷ் நாகேஷ், ஆடுகளம் நரேன், பக்ஸ், காயத்ரி, நிழல்கள் ரவி, ரவீந்திர விஜய், வையாபுரி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- செல்வமணி செல்வராஜ்.
ஒளிப்பதிவாளர் :- டானி சான்செஸ் லோபஸ்.
படத்தொகுப்பாளர் :- லெவெல்லின் அந்தோனி கோன்சால்வேஸ்.
இசையமைப்பாளர் :- ஜானு சாந்தர்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்பிரிட் மீடியா, வேஃபேரர் பிலிம்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- ராணா டக்குபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ்.
ரேட்டிங் :- 4.25/5.
கருப்பு வெள்ளை திரைப்படங்கள் வரும் காலகட்டத்தில் பிரபல திரைப்பட உலகில் மிகப்பெரிய நடிகராக இருக்கும் கதாநாயகன் துல்கர் சல்மான், நடிப்பு சக்கரவர்த்தியாக உருவாக்கிய இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் கதாநாயகி பாக்யஸ்ரீயை சுற்றிதான் கதை அமைந்திருக்கிறது.
இயக்குனர் சமுத்திரகனியின் கனவு கதையாக உருவாக்கும் திரைப்படம் சாந்தா.
மிகவும் சாதாரணமாக இருக்கும் கதாநாயகன் கதாநாயகன் துல்கர் சல்மானை நடிப்பின் சக்கரவார்த்தியாக உருவாக்கிய இயக்குனர் சமுத்திரகனியின் கனவு திரைப்படத்தில் நடிக்க வைக்க முயற்சிக்கிறார்.
ஆனால், கதாநாயகன் கதாநாயகன் துல்கர் சல்மான் இந்த கதையின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றம் வேண்டும் என கதாநாயகன் துல்கர் சல்மான் அந்த திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் இடம் கூறுகிறார்.
என்னுடைய கதையை எப்படி நீ மாற்ற முயற்சிக்கலாம் என்று கதாநாயகன் துல்கர் சல்மானுக்கும் சமுத்திரகனி கற்கும் இடையே ஈகோ பிரச்சனை மிகப்பெரிய அளவில் எழுகிறது.
தன்னுடைய கனவு கதை திரைப்படமான சாந்தா என்பதால், திரைப்படத்தை எப்படியாவது முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி, கதாநாயகன் துல்கர் சல்மான் அடாவடியை பொறுத்துக் கொண்டாலும், தான் எழுதிய கதையில் உள்ள கிளைமாக்ஸ் காட்சியுடன் தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
தான் நினைத்து நடத்துவதற்காக தன்னால் அடையாளம் காணப்பட்ட திரைப்படத்தின் கதாநாயகி பாக்யஸ்ரீயின் உதவியை இயக்குனர் சமுத்திரகனி நாடுகிறார்.
கதாநாயகன் துல்கர் சல்மான் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியின் மோதல்களுக்கு இடையே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பில் கதாநாயகனுக்கும், மற்றும் கதாநாயகி பாக்யஸ்ரீ-க்கும் இடையே காதல் ஏற்படுகிறது.
இருவருக்குள் காதல் இருப்பதை தெரிந்து கொண்ட இயக்குனர் சமுத்திரக்கனி இதனால், மேலும் கோபமடையும் இயக்குநர் சமுத்திரகனி தன்னுடைய கிளைமாக்ஸ்படி திரைப்படம் முடிய வேண்டும் என்பதில் தீவிரம் காட்ட, இயக்குனர் சமுத்திரக்கனிக்கு போட்டியாக கதாநாயகனும் துல்கர் சல்மான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகன் துல்கர் சல்மான் இயக்குனர் சமுத்திரகனி இவர்கள் இருவரின் மோதல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது, இவர்களின் யார் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்.
கதாநாயகன் துல்கர் சல்மான் நினைத்தபடி திரைப்படம் முடிகிறதா? இயக்குனர் சமுத்திரகனி நினைத்ததை போல் திரைப்படம் முடிகிறதா? என்பதுதான் இந்த ‘காந்தா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த காந்தா திரைப்படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் படித்திருக்கிறார்.
பழம்பெரும் நடிகர் கதாபாத்திரத்தில் நடிப்பு சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயருடன் நடித்திருக்கும் கதாநாயகன் துல்கர் சல்மான், தான் ஒரு நடிப்பு சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார்.
கதாநாயகன் துல்கர் சல்மானின் தோற்றம், ஹேர் ஸ்டைல் வசீகரமான முகம் நடை உடை ஆகியவற்றுடன் பிரமிக்க வைக்கும் நடிப்பு என ஏற்று நடித்துள்ள கதாநாயகன் துல்கர் சல்மான் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
கதாநாயகன் துல்கர் சல்மானின் நடிப்பால் ஒட்டுமொத்த திரைப்பட ரசிகர்களை மனதில் பதிந்து விடுகிறார்.
இந்த காந்தா திரைப்படத்திற்காக நடிகர் துல்கர் சல்மானுக்கு பல விருதுகள் கிடைப்பது மட்டுமல்லாமல் தேசிய விருது கிடைப்பது உறுதி.
இந்த காந்தா திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.
பழம்பெரும் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திக்கனி, இதுவரை பார்த்திராத வேறு ஒரு பரிணாமத்தில் நடிப்பை மிகவும் அற்புதமாக கொடுத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகன் துல்கர் சல்மானுக்கு இணையான கதாபாத்திரம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் கதாநாயகன் துர்கா சல்மானுடன் போட்டி போட்டு நடித்து அசத்தியிருக்கிறார்.
இந்த காந்தா திரைப்படத்தில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ, 1950 60 கால கட்டங்களில் உள்ள நடிகைகளின் முக சாயலுடன் கவர்ந்திழுக்கும் அழகியாக வந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளார்..
அளவுக்கு அதிகமான அழகு மற்றும் அளவான நடிப்பு, அப்பாவித்தனமான பேச்சு என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராணா டகுபதியின் நடிப்பில் வித்தியாசத்தை காட்ட, வேண்டும் என்று முயற்சி செய்து அந்தக் கதாபாத்திரத்தில் ஓவரான நடிப்பை கொடுத்து, சில இடங்களில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கடுப்பேற்றவும் செய்திருக்கிறார்.
உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிஜேஷ் நாகேஷ், மிகவும் அருமையான நடிப்பை கொடுத்து பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து விடுகிறார்.
கதாநாயகன் துல்கர் சல்மானின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காயத்ரி, கதாநாயகன் துல்கர் சல்மானின் மாமனார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிழல்கள் ரவி, ஸ்டுடியோ உரிமையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவீந்திர விஜய், உயர் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், கதாநாயகன் துர்கா சர்மானின் ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வையாபுரி, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பக்ஸ் அனைவருக்கும் சுறுசுறு கதாபாத்திரங்கள் என்றாலும் கதையோடு பயணித்து திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸின் ஒளிப்பதிவு மூலம் பழங்காலத்தில் உள்ள திரைப்படங்களை பார்ப்பது போல் அக்காலத்தில் உள்ள திரைப்படமாக சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸ் ஒளிப்பதிவு மூலம் தற்போது உள்ள காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆக இருந்தாலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஒளிப்பதிவு மூலம் 1950 அறுபது காலகட்டங்களில் பயணிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜானு சந்தர், தனது இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ரசிகர்களை திரைப்படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் வாழ்ந்த பழம்பெரும் நடிகர் ஒருவரது கதாபாத்திரத்தை கதைகருவாக வைத்துக்கொண்டு மிகச் சிறப்பான திரைக்கதை திரைப்படத்தை சுவாரஸ்யமாக இருக்கிறார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ்,.
மொத்தத்தில், ‘காந்தா’ திரைப்பட ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.











