‘கிங்டம்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கௌதம் தின்னனுரி.
ஒளிப்பதிவாளர் :- கிரீஷ் கங்காதரன், ஜோமோன் டி. ஜான்.
படத்தொகுப்பாளர் :- நவீன் நூலி.
இசையமைப்பாளர் :- அனிருத் ரவிச்சந்தர்.
தயாரிப்பு நிறுவனம் :- சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் கிரியேஷன்ஸ், ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- நாக வம்சி,
சாய் சௌஜன்யா.
ரேட்டிங் 3.5./5.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள காவல்துறையில் உள்ள காவலரான கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, சிறு வயதில் தனது தந்தையை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு ஓடிப்போன தனது அண்ணன் சத்ய தேவ்வை பல ஆண்டுகளாக தேடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் சத்யதேவ் பற்றிய தகவல் ஒன்றை கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவிற்க்கு தெரிவிக்கும் தேசிய பாதுகாப்பு துறை அதிகாரி, உன்னுடைய அண்ணனை காப்பாற்ற வேண்டும் என்றால், இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் மாஃபியா கூட்டத்திற்குள் ரகசிய உளவாளியாக நீ நுழைய வேண்டும் என்றும், அது மிகவும் ஆபத்தான பணி என்றும் தேசிய பாதுகாப்பு துறை அதிகாரி, கூறுகிறார்.
கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் சத்யதேவ்வை மீட்டு தனது தாயிடம் கண் முன்னே நிறுத்த வேண்டும் அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்துவிடும் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, ரகசிய உளவாளியாக இலங்கை மாஃபியா கூட்டத்திற்குள் நுழைகிறார்.
ஆனால், அங்கு நிலமை வேறு மாதிரியாக இருக்க தனது அண்ணன் சத்ய தேவ்வை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இலங்கைக்கு செல்லும் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, ஒரு மலைவாழ் இனத்தையே மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்.
அந்த மலைவாழ் இனத்திற்கும் கதாநாயகன் விஜய் தேவர் கொண்டாவுக்கும் என்ன தொடர்பு ?, தனது அண்ணன் சத்ய தேவ்வை கண்டுபிடித்தாரா?, கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த கிங்டம் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த கிங்டம் திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா இந்த கிங்டம் கோபக்கார காவலராகவும்
கடத்தல்காரனாகவும் ஒரு மலைவாழ் இனத்தை காக்கும் தலைவன் என பல்வேறு வித்தியாசமான கோணங்களில் நடித்திருக்கும் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, ஒவ்வொரு பரிணாமங்களிலும் நடிப்பில் வித்தியாசத்தை காண்பித்து திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமல்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளிலும் தன்னுடைய நடிப்பு திறமையை காண்பித்து மிக அருமையாக அசத்தியிருக்கிறார்.
கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யதேவின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு மிக்கதாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கதாநாயகனுக்கு முக்கிய தத்துவத்தை கொடுத்து இந்த கதாபாத்திரம் காணாமல் போய்விடுகிறது.
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை எந்தவிதமான குறையின்றி நடித்து இருக்கும் சத்யதேவ் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்கள் மனதில் சிவாவாக மனதில் நின்றுவிடுகிறார்.
இந்த கிங்டம் திரைப்படத்தில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ அழகாகவும் வசீகரமாகவும் உள்ள முகம் ஆனால், நிரைப்படத்தில் அவருக்கான வேலை பெரிதாக இல்லை.
முருகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ், தேசிய பாதுகாப்பு துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மனிஷ் சவுத்ரி, பழங்குடி இன மக்களின் குரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐயப்பா பி.சர்மா, இலங்கை மாஃபியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாபுராஜ் அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை எந்தவித குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் கிரிஸ் கங்காதரன் மற்றும் ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக காட்டியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக, அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் அனிருத்தின்
குறிப்பாக பின்னணி இசையும், மாஸ் காட்சிகளின் பீஜியமும் காட்சிகளுடன் ரசிகர்களை ஒன்றிவிட செய்துவிட்டார்.
தன் அண்ணனை தேடும் சாதாரண காவலர் என்ற எளிமையான கதாபாத்திரத்தில் தொடங்கும் கதையை, பெரும் குற்ற பின்னணி கொண்ட கும்பலின் சதி திட்டங்களை முறியடிக்கும் உளவாளி, இலங்கையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் பழங்குடி இன மக்கள், அவர்களை வைத்து கடத்தல் தொழில் செய்யும் கூட்டம், என திரைக்கதையை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் கௌதம் தின்னனுரி,
மொத்தத்தில், ‘கிங்டம்’ அருமையான் கிரீடம் சூடும்.











