’படையாண்ட மாவீரா’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- வ.கௌதமன், பூஜிதா பொன்னடா, பி.சமுத்திரக்கனி, பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான். ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, மதுசூதன் ராவ், தமிழ் கௌதமன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வ. கௌதமன்.
ஒளிப்பதிவாளர் :- கோபி ஜெகதீஸ்வரன்.
படத்தொகுப்பாளர் :- ராஜா முகமது.
இசையமைப்பாளர் :- ஜி.வி. பிரகாஷ் குமார், சாம் சி.எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- வி கே புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- நிர்மல் சரவணராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி.
ரேட்டிங் :- 2.5./5.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் உள்ள நில வளத்தைச் எடுக்கும் கார்ப்பரேட் முதலாளிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று அப்பகுதி கிராம மக்களின் நம்பிக்கைக்குரியவராக கதாநாயகன் வ.கௌதமன் மதிக்கப்படுகிறார்.
கதாநாயகன் வ.கௌதமன் தாத்தா காலத்தில் இருந்து தமிழ் சமூகத்துக்காக போராடும் குடும்பமாக இருக்கிறார்கள்.
கதாநாயகன் வ.கௌதமன் தந்தை சமுத்திரக்கனி, அப்படியே தமிழ் மக்களுக்கு போராடும் குடும்பமாக இருக்கிறார்.
கதாநாயகன் வ.கௌதமன் தந்தை சமுத்திரக்கனியின் சொந்த மச்சான் ஆடுகளம் நரேன் கைகளால் கொலை செய்யப்படுகிறார்.
கதாநாயகன் வ.கௌதமனின் தந்தை சமுத்திரக்கனியை கொன்ற ஆடுகளம் நரேனை சமுத்திரக்கனியின் மகன் கதாநாயகன் வ.கௌதமன் பழி தீர்த்துக் கொள்கிறார்.
அதன் பிறகு அந்த கிராமத்தை பகுதியை பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நில மோசடிகள், நில ஆக்கிரமிப்பு போன்ற அந்த கிராமத்தில் உள்ள யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முன்னால் வந்து நின்று கதாநாயகன் வ.கௌதமனின் தட்டிக் கேட்கிறார்.
தனது மக்களுக்கும் தன்னுடைய கிராமத்துக்கும் தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகளை துவம்சம் செய்து சட்டப் போராட்டம் நடத்தி போராடி வெற்றியும் பெற்று எனவே அப்பகுதி மக்களின் அனைவரும் கதாநாயகன் வ.கௌதமன் பாதுகாவலனாக ஏற்றுக் கொண்டு தங்கள் உயிரையே கொடுக்கும் ஒரு கூட்டம் உருவாகிறது.
அந்த கூட்டத்திற்காகவும் அவருடைய கிராமத்து தன் இன மக்களுக்காகவும், தனது மண்ணுக்காகவும் போராடியதோடு, தமிழர்கள் அனைவருக்கும் ஆன ஒரு தலைவனாக நிற்கிறார் என்பதுதான் இந்த ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் வ.கௌதமன் நடித்திருக்கிறார்.
காடுவெட்டி குரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் வ.கெளதமன், சண்டைக்காட்சிகள், நடனம் என அனைத்திலும் அருமையாக நடித்திருக்கிறார்.
இந்த ’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னாடா வுக்கு பெரியதாக திரைப்படத்தில் வேலை ஒன்றும் இல்லை என்றாலும் ஒரு சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சியில் தலை காட்டுவதற்காக கதாநாயகி ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
கதாநாயகன் வ.கௌதமன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, குறைவான காட்சிகளில் வந்தாலும், தனது வழக்கமான பாணியிலான நடிப்பால் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.
இந்த ’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் சிறுவயது கதாநாயகனாக தமிழ் கௌதமன் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் வ.கௌதமனின் இளம்பருவ கதாநாயகனாக தமிழ் கௌதமன் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தனது தந்தையை கொலை செய்த ஆடுகளம் நரேனை பழி தீர்க்க வேண்டும் என்ற தனது கோபத்தை கண்களில் மட்டும் இன்றி உடல் மொழியிலும் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் தமிழ் கெளதமனின் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறது.
சமுத்திரகனி மச்சான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், கதாநாயகன் வ கௌதமன் அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன், கதாநாயகன் வ கௌதமன் நன்பர கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான், காவல்துறை காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, கதாநாயகன் வ.கௌதமன் நன்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுசூதனன் ராவ் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை எந்தவித குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, மட்டுமல்லாமல் சண்டைக் காட்சிகளில் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது திரைப்படத்தில் தெரிகிறது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் கமர்ஷியலாக, இருக்கிறது.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸின் பின்னணி இசையில் சில காட்சிகளில் கவனம் ஈர்த்துள்ளது.
உண்மையும் கற்பனையும் கலந்து காடுவெட்டி குருவின் வாழ்க்கை உண்மையான சம்பவங்களையும், மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கும் வ.கெளதமன்.
மொத்தத்தில், ‘படையாண்ட மாவீரா’ காடுவெட்டி குருவின் கற்பனையான திரைப்படம்.











