தமிழகத்தில் தென்னக காசி கால பைரவர் திருக்கோயில் ஆசியாவிலே உலகில் மிகப்பெரிய பைரவர் ஆலயம்!
சென்னை 01 டிசம்பர் 2022 தமிழகத்தில் தென்னக காசி கால பைரவர் திருக்கோயில் ஆசியாவிலே உலகில் மிகப்பெரிய பைரவர் ஆலயம்!உலகிலேயே மிகப்பெரிய பைரவர் ஆலயம் ஒன்று உருவாகி வருகிறது.
64 பைரவர்களுக்கும் அந்த ஒரே ஆலயத்தில் சிலைகள் வைக்கப்படுகின்றன.
இந்தப் பைரவர் ஆலயம் ஈரோடு மாவட்டம் காங்கேயம் சாலையில் அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிப் பாளையத்தில் கட்டப்பட்டு உருவாகி வருகிறது.
இதன் நுழைவாயிலில் ராஜகோபுரம் இருப்பது போல் உலகின் மிகவும் பிரம்மாண்டமான 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை உருவாகியுள்ளது.
அவர் வழியாகத்தான் ஆலயத்தில் உள்ளே செல்ல வேண்டும்.
சிவனின் அவதாரமாக பைரவர் இருக்கிறார் என்பது நம்பிக்கை.
பைரவரின் வாகனம் நாய்.காலபைரவரின் பின்னால் பிரம்மாண்டமான நாய் உருவம் உள்ளது.
இந்த உலகின் மிகப்பெரிய காலபைரவர் சிலையை பலரது கூட்டு முயற்சியில் உருவாக்கி வரும் விஜய் ஸ்ரீ சுவாமிகள் கூறும் போது,
”எனக்குச் சிறுவயதிலிருந்து நாய்கள் பிடிக்கும் .பைரவரின் வாகனமாக இருப்பதுதான் நாய்.எங்கள் வீட்டில் இருபது நாய்களுக்கு மேல் இருந்தன. அந்த அளவிற்குச் சிறு வயதிலேயே எனக்குள் பைரவர் நிறைந்துவிட்டார் .
சின்ன விதையாக விழுந்தது ஆலயமாக உருவாகி இப்போது நிறைவடையும் நிலையில் இருக்கிறது. எல்லாம் கால பைரவர் அழைத்துச் சென்று வழிகாட்டியதுதான்.ஆசியாவிலேயே உயரமான 39 அடி கால பைரவரை நுழை வாயிலாகக் கொண்ட நமது தென்னக காசி பைரவர் திருக்கோயில் தலம்,
பொதுவாக சிவாலயங்களில் தெற்குப் புறமாக சிறிதாக இரண்டு அடி உயரத்தில் ஒரு கால பைரவர் சிலை இருக்கும்.
ஆசியாவிலேயே உயரமான 39 அடி கால பைரவரை நுழை வாயிலாகக் கொண்ட நமது தென்னக காசி பைரவர் திருக்கோயில் தலம்,
இந்தக் கோயிலின் திருக்குடமுழுக்கு என்கிற மகாகும்பாபிஷேக விழா வரும் 2023 மார்ச் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
முறையான வேள்விகள், நான்கு கால பூஜைகளுக்குப் பிறகு இது நடைபெற உள்ளது.
இந்தக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
மக்கள் அனைவரும் பாரம்பரியத்தை நோக்கித் திரும்பிப் பார்க்கிற காலகட்டமாக இப்போதைய காலம் மாறி உள்ளது.
நமது பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்வுகளை பிரமாண்டமாக நடத்த இருக்கிறோம்.
இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவல்பூந்துறை கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகால பழமையான சிவன் கோவிலில் இருந்து ஆயிரம் பேர் குடமுழுக்குக்கான தீர்த்தத்தைக் கொண்டு வருகிறார்கள்.
அது மட்டுமல்ல ஒரு கும்மித் திருவிழாவும் நடைபெற உள்ளது.
இவையெல்லாம் இந்தக் கோவிலின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் மக்களுக்குக் கவன ஈர்ப்பு செய்யும் அம்சங்களாகும்.
இந்தக் கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கே 650 கிலோ எடையுள்ள ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிலை ஒன்று உள்ளது.
குடமுழுக்கின்போது மக்கள் அனைவரும் இதற்கு நெய் அபிஷேகம் செய்யலாம்.
இந்த ஆலயத்தில் ஜாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் வந்து அருள் பெற்றுச் செல்லலாம்.
அந்த வகையில் பொது மக்களின் ஆலயமாக சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் வணங்கக் கூடிய ஆலயமாக இது உருவாகியிருக்கிறது.
பைரவர்கள் 64 பேருக்கும் சிலைகளை அமைத்து வருகிறோம்.
அதன்மூலம் இந்தப் பைரவர் ஆலயப் பணியில் பங்கு பெறலாம்.
ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை அமைத்து ஏற்கெனவே நாங்கள் பல உதவிகளைச் செய்து வருகிறோம்.
இப்பணிகளில எங்களுக்கு 12 டாக்டர்கள் உதவி வருகிறார்கள்.
இந்த ஆலயத்தின் திருப்பணி என்பது ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது.
Related posts:
இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும் – ‘என்ஜாய் ‘ இயக்குனர் பெருமாள் காசி.!
செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் சினிமா சென்ட்ரல் இணைந்து வழங்கும் உலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் ஒரு கேம் ஷோ.
சேத்துமான் திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை தருகிறது இயக்குனர் பா.இரஞ்சித்.
100′ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழில் தங்களது அடுத்த படைப்பாக ” அயலி ” என்ற தொடரினை அறிவித்துள்ளது.!!
இந்து, முஸ்லீம், கிறிஸ்டின் மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம் நடிகர் ராகவா லாரன்ஸ் துவங்குகிறார்
நிசப்தம் திரைப்படத்தில் ஹாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான மைக்கேல் மெட்ஸன் நடிக்க வைத்து எப்படி.
’நித்தம்’ புகைப்படக் கண் காட்சி: ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின்!
மோகன்லால் என்னை தேர்வு செய்ததே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது ; கோமல் சர்மா பெருமிதம்!
அனைத்து காட்சிகள் ஹவுஸ்புல் “பொன்னியின் செல்வன் – பாகம் 1” திரைப்படத்தின் முன்பதிவில் மிகப்பெரிய சாதனை!!

