நடிகர் சூர்யா, நடித்துள்ள ‘கங்குவா’. திரைப்படம் ரூபாய் .2,000 கோடி வசூல் செய்யுமா?
நடிகர் சூர்யா, நடித்துள்ள ‘கங்குவா’. திரைப்படம் ரூபாய் .2,000 கோடி வசூல் செய்யுமா?
ரூ.2,000 கோடி வசூலிக்குமா ‘கங்குவா’ திரைப்படம் என்ற கேள்விக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’.
இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த ‘கங்குவா’திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார்.
இந்த ‘கங்குவா’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
டெல்லி மற்றும் மும்பை விளம்பர நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, நேற்று அக்டோபர் .24ஆம் தேதி ஹைதராபாத்தில் விளம்பர பணிகளைத் நடிகர் சூர்யா தொடங்கியிருக்கிறார்
.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யாவிடம் கோலிவுட்டில் இருந்து ரூ.2,000 கோடி வசூலிக்கும் முதல் படமாக ’கங்குவா’ இருக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருக்கிறார்.
இதை எப்படி பார்க்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகர் சூர்யா.
பெரிய கனவு கண்டால் என்ன குற்றம்? நான் அவரது வெளிப்பாட்டை நம்புகிறேன்.
அது நடந்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.” என்று பதிலளித்தார்.










