கங்குவா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தை அறிவித்த படக்குழுவினர்.!!!
கங்குவா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தை அறிவித்த படக்குழுவினர்.!!!
சென்னை 22 ஜூலை 2023 இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் நடிகர் சூர்யாவின் கேரியரின் மிகப்பெரிய ப்ராஜெக்ட் என கூறப்படுகிறது,
இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இந்த கங்குவா திரைப்படம் கடந்தகால வாழ்க்கைக் கருத்தைக் கையாள்கிறது.
3டி வடிவத்திலும் வெளியாகும் இந்த விஷுவல் மெகா திரைப்படத்தில் நடிகர் சூர்யா வலிமைமிக்க வீரனாக நடித்துள்ளார்.
இந்த கங்குவா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜூலை 23 ஆம் தேதி அதிகாலை 12:01 மணிக்கு ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியாகும் என திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதில் நடிகர் சூர்யாவின் முகத்தை வாள் மறைப்பது போன்ற போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
https://twitter.com/StudioGreen2/status/1682775210280497153?t=PKGqyE4IDu3Z18NDVB6MyA&s=19
https://twitter.com/StudioGreen2/status/1682775210280497153?t=E04PnOCHmd-ZdSi5dTH2Rw&s=19