நடிகர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் 14ஆம் தேதி வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது !
நடிகர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் 14ஆம் தேதி வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது !
சென்னை 12 நவம்பர் 2024 நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் வெளியாக வேண்டும் என்றால் ரூபாய் 20 கோடியை வரும் 13 ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் கங்குவா திரைப்படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், கங்குவா திரைப்படம் 14ஆம் தேதி வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் கங்குவா’ திரைப்படம் வரும் 14 ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கிறது.
‘கங்குவா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரித்த டெடி 2 , தங்கலான் உள்ளிட்ட சில திரைப்படங்களின் தயாரிப்பு செலவுகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 99 கோடி கடனாக வாங்கி இருக்கிறார்.
அதில் ரூபாய் 45 கோயை திருப்பி கொடுத்த நிலையில் மீதமுள்ள 55 கோடி இன்னும் கொடுக்காமல் ஒப்பந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் பாக்கி உள்ள 55 கோடியை கொடுக்காமல் நடிகர் சூர்யா நடித்து வெளியாக உள்ள ‘கங்குவா’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் இதுக்கு நான் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிடக்கூடாது எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீது அண்மையில் விசாரணை நடந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுக்க வேண்டிய தொகையில் 18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்தி விட்டதால் ‘தங்கலான் திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிட ஆட்சேபனை இல்லை என ரிலையன்ஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மீதமுள்ள தொகை நாளைக்குள் திரும்ப செலுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.
‘கங்குவா’ திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, நிரைப்படத்தின் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளை படக் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மற்றொரு வழக்கு மூலம் ‘கங்குவா’ திரைப்படத்தின் வெளியிட்டில் சிக்கல் எழுந்துள்ளது.
அர்ஜுன் லால் என்பவரிடம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக சொத்தாட்சியர் வழக்கு தாக்கல் செய்தார்.
அர்ஜுன் லால் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்துள்ளார்.
நிதி இழப்பு ஏற்படவே, அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.
பின்னர் அவர் இறந்துவிட அவரது சொத்துகளை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் அர்ஜுன் லாலிடம் கடன் பெற்றுவிட்டு திரும்பச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
அந்த அடிப்படையில், சொத்தாட்சியர் தாக்கல் செய்த வழக்கில் ரூபாய் 20 கோடியை 13 ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் ‘கங்குவா’ திரைப்படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.