நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை 10 மார்ச் 2022 நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
புரட்சி நாயகன் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இன்று வெளியாகியிருக்கும் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் சூர்யா ரசிகர்கள் அதிகளவில் கொண்டாடி வருகின்றனர்.
‘எதற்கும் துணிந்தவன்’.திரைப் படத்தின் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.
மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, துரைசாமி தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா, ஜெயப்பிரகாஷ் விஜய் டிவி ராமர், தங்கதுரை, உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்திருக்கிறார்கள்.
கடந்த 2015-ஆம் வருடம் வெளியான பசங்க 2 திரைப்படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் மேலும் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகரித்திருக்கிறது.
நடிகர் சூர்யா நடித்த திரைப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இரண்டரை வருடங்கள் ஆகிறது.
நீண்ட இடைவேளைக்கு பின் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்கில் வெளியாவதால், அதிகாலை நான்கு மணி முதலே திரையரங்குகளில் நடிகர் சூரியாவின் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
இந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ், மற்றும் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் இன்று வெளியாகி அனைத்து மொழிகளிலும் மிகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.