‘கர’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :-தனுஷ், மமிதா பைஜு, ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சாரமூடு, எம்.எஸ். பாஸ்கர், ஸ்ரீஜா ரவி, கதிரவன் பாலு, சரவணா சக்தி, சசிகுமார், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- விக்னேஷ் ராஜா.
ஒளிப்பதிவாளர் :- தேனி ஈஸ்வர் ISC.
படத்தொகுப்பாளர் :- ஸ்ரீஜித் சாரங்.
இசையமைப்பாளர் :- ஜி.வி. பிரகாஷ் குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & திங்க் ஸ்டூடியோஸ்.
தயாரிப்பாளர் :- டாக்டர் ஐசரி கே. கணேஷ், குஷ்மிதா கணேஷ்.
மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM).
ரேட்டிங் :- 4.25./5.
ராமநாதாபுரம் மாவட்டத்தின் அருகில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் திருட்டுத் தொழில் செய்து வரும் கதாநாயகன் தனுஷ் கடைசியாக ஒரு திருட்டை மேற்கொள்ளலாம் என அந்த ஊரில் உள்ள எம்எல்ஏ வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்றை நடத்தும் கதாநாயகன் தனுஷ் மற்றும் பிரிதிவி இருவரும் இணைந்து நடத்தும் அந்த திருட்டு சம்பவத்தில் கதாநாயகன் தனுஷ் மட்டும் காவல்துறையினரிடம் சிக்கி கொள்கிறார்.
கதாநாயகன் தனுஷ் மீது அந்த ஊரில் நடந்த பல்வேறு திருட்டு வழக்குகளை காவல்துறை அதிகாரியான சுராஜ் வெஞ்சாரமூடு, திணிக்க நினைக்கின்றனர்.
அதை அறிந்த கதாநாயகன் தனுஷ் காவல்துறை அதிகாரியான சுராஜ் வெஞ்சாரமூடு, காவல் நிலையத்தில் வைத்து தாக்கி விட்டு தப்பி சென்று விடுகிறார்.
காவல்துறையிடம் இருந்து தப்பித்த தலைமறைவாக வாழ்ந்து வரும் கதாநாயகன் தனுஷ் தனது காதல் மனைவி மமிதா பைஜு, இருவரும் ஒரு மெஸ்ஸில் பணிபுரிகிறார்கள்.
தனது காதல் மனைவி மமிதா பைஜு, கஷ்டப்படுவதை பார்த்து திருட்டைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும் சொந்தத் தொழில் செய்யலாம் எனத் தோன்ற ஒரு மெஸ் தொடங்கி நடத்த முடிவு செய்து வங்கியில் சென்று கடன் கேட்கிறான்.
கடன் தர வேண்டும் என்றால் வங்கி மேலாளர் கதிரவன் பாலு அடமானமாக ஏதாவது நிலம் கேட்கவே தனது சொந்த ஊரான ராமநாதபுரத்திலிருக்கும் தன் தந்தை கேஎஸ் ரவிக்குமாரை சந்தித்து ஊரில் உள்ள 8 ஏக்கர் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து அதில் கிடைக்கும் பணத்தில் மெஸ் தொழிலை தொடங்கலாம் என முயற்சிக்கிறார்.
ஆனால், தனது தந்தை கே.எஸ் ரவிக்குமார் ஏற்கனவே அந்த 8 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து டிராக்டர் வாங்கி மாதந்தோறும் தவணை கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது கதாநாயகன் தனுஷ் தெரிய வருகிறது.
அந்த 8 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு வங்கியில் உள்ள கடனை அடைத்து விட்டு தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்வதாக தந்தை கே எஸ் ரவிக்குமாரிடம் கதாநாயகன் தனுஷ் கூறுகிறார்.
மகன் கதாநாயகன் தனுஷ் கூறுவதை கேட்ட தந்தை கே எஸ் ரவிக்குமார் இதனால் மனம் வேதனை அடைந்து மறுநாள் இறந்து விடுகிறார்.
தனது தந்தை கே எஸ் ரவிக்குமார் இறந்த உடலை தந்தைக்கு சொந்தமான அந்த 8 ஏக்கர் நிலத்தில் புதைக்க சடங்குகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் வாங்கிய கடனுக்காக அந்த வங்கியின் மேளாளர் அந்த நிலத்தை ஜப்தி செய்கிறார்கள்.
தந்தை கே எஸ் ரவிக்குமார் வாங்கிய வங்கிக்கடனை அடைக்க அந்த வங்கியிலேயே கொள்ளையடிக்க கதாநாயகன் தனுஷ் திட்டமிடுகிறார்.
வங்கியை கொள்ளை அடிக்கும் திட்டம் என்ன ஆனது?
கதாநாயகன் தனுஷ் வங்கியை கொள்ளை அடித்தாரா? கொள்ள அடிக்கவில்லையா?
கதாநாயகன் தனுஷ் தனது தந்தை கே எஸ் ரவிக்குமார் வங்கியில் வாங்கிய கடனை அடைத்தாரா? கடனை அடைக்கவில்லையா?
தந்தை கே எஸ் ரவிகுமாரின் உடலை தந்தைக்கு சொந்தமான நிலத்தில் இறுதி சடங்கு செய்தாரா? செய்யவில்லையா? என்பதுதான் இந்த ‘கர’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘கர’ திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார்
கரசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் எப்போதும் போல் தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த கதையையும் தன் தோளில் சுமந்து கதாப்பத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
இந்த ‘கர’ திரைப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜூ மிகத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் திரைப்படத்தில் கதாநாயகன் தனுஷூடன் ஒரு சில காட்சிகள் மட்டுமே உள்ளன.
இந்த கதையில் கதாநாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜூக்கு எந்த ஒரு காட்சியிலும் பெரிதாக பங்கு இல்லாதது ஏமாற்றம்தான்.
கதாநாயகன் தனுஷ் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கேஎஸ். ரவிகுமார் தனது வழக்கமான ஸ்டைலில் நடிப்பு இல்லாமல் புது விதமாக கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூராஜ் வெஞ்சமூடுவின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.
வங்கி மேலாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம் நகைச்சுவை , வில்லத்தனம் என மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
கதாநாயகன் தனுஷ் தாய்மாமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு செய்திருக்கிறார்.
கதாநாயகன் தனுஷ் உடன் பயணித்திருக்கும் பிரித்வி பாண்டியராஜன் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு 90 கால கட்டங்களை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்துகிறது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
வங்கிகளை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன் வாழ்வைப் பற்றி சொல்லும் கதையாக இருந்தாலும் சிறப்பான துறக்குது மூலம் விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும் வங்கி கடன் பற்றிய கொடுமையை வெகு இயல்பாக இயக்கி இருக்கிறார் விக்னேஷ் ராஜா.
மொத்தத்தில், ‘கர’ – ஏழை விவசாயிகளின் கண்ணீர் துடைக்க கிராமத்திற்கு ஒரு ‘கரசாமி’ பிறக்க வேண்டும்.




