மாமன்னனை திரைப்படத்தை பார்த்து பாராட்டி முதல் விமர்சனத்தை கொடுத்த கர்ணன்.!!!

மாமன்னனை திரைப்படத்தை பார்த்து பாராட்டி முதல் விமர்சனத்தை கொடுத்த கர்ணன்.!!!

சென்னை 28 ஜூன் 2023 மாமன்னன்  திரைப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள்’ தனுஷ் மற்றும் லால் யோகிபாபு நடிப்பில் வெளிவந்த ’கர்ணன்’ ஆகிய இரண்டு வெற்றி திரைப்படங்களை இயக்கிய நிலையில் அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள திரைப்படம் ’மாமன்னன்’.

இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி மிகப்பெரிய சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளது.

என்பதும் இந்த திரைப்படம் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது.

தனது மூன்றாவது படைப்பாக மாரி செல்வராஜ் உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் மாமன்னன்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து  கதாநாயகனாக நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு கவனிக்க மாமன்னன் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.

இதுவரை தமிழ் திரைப்பட உலகில் வைகைப்புயல் வடிவேலு அவர்களை எந்த ஒரு கோணத்தில் பார்த்ததே இல்லை என சொல்லும் அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ், வைகை புயல் வடிவேலு அவர்களை நடிக்க வைத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த ட்ரெய்லர் வைகை வடிவேலுவின் கதாபாத்திரத்தின் மீதும் மாமன்னன் திரைப்படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருவதால் முழுவதுமாக திரைப்படம் உவகை விட்டு விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளார்.

எனவே மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசி திரைப்படம் என்பதும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது.

நாளை ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை வென்று விட்டன.

இந்த நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தின் தனது முதல் விமர்சனத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

 “மாரி செல்வராஜின் மாமன்னன் படம் ஒரு உணர்வு.

உங்களுக்கு ஒரு பெரிய அணைப்பு(HUG) மாரி.

வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மிகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

ஃபகத் ஃபாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரது பணி அபாரம்.

குறிப்பாக இடைவேளை காட்சியில் திரையரங்குகள் எல்லாம் வெடிக்கும்.

இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் அற்புதம்!”

என தனது முதல் விமர்சனத்தை பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் தனுஷ் மாமன்னன் திரைப்படம் குறித்து பதிவிட்ட அவரது முதல் விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் தனுஷின் அந்த விமர்சனத்தை கீழே உள்ள டுவிட்டர் பக்கத்தில் காணலாம்.

https://twitter.com/dhanushkraja/status/1673953021032828930?t=xDMKG9HKkRwA2j04zb0OAg&s=19

error: Content is protected !!