குழலி திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5.

நடிகர் நடிகைகள் :- காக்கா முட்டை விக்னேஷ், ஆரா, மஹா, ஷாலினி, செந்தி குமாரி, ஆட்டோகிராப் அலெக்ஸ் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சேரா கலையரசன்.

ஒளிப்பதிவு :- சமீர்.

படத்தொகுப்பு :- T தியாகு.

இசை :- டி எம் உதயகுமார்.

தயாரிப்பு :- முக்குழி பிலிம்ஸ்.

ரேட்டிங் :- 3.5 / 5.

நம் நாட்டில் ஜாதி இருக்கிறது என்று கூறி பல அரசியல்வாதிகள் சம்பாதித்துக் வாழ்க்கையை ஓட்டிக்  கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் ஜாதி இல்லை என்று கூறி வாழ்க்கையை ஓட்டிக்  கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட உலகில் ஜாதி மதத்தையும் உயர்த்தி பல திரைப்படங்கள் வந்திருக்கிறது.

ஜாதி இல்லை ஜாதி வேண்டாம் என்று கூறும் திரைப்படங்கள் வந்திருக்கிறது.

இதில் இரண்டாவது வகையை சேர்ந்ததுதான் தற்போது வெளியாகியிருக்கும் குழலி திரைப்படம்.

தமிழ் திரைப்பட உலகில் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் மற்றும் தரமான திரைப்படங்கள் வருகிறது.

ஆனால் அதற்கு தேவையான  என்றுமே திரையரங்குகள்  கிடைப்பதில்லை.

இதனால் பல திரைப்படங்கள் ரசிகர்களை சென்று அடைவதில்லை அதிலும் குறிப்பாக சர்வதேச விருதுகளை குவித்த திரைப்படங்களுக்கும் இதே நிலைமை தான்.

இந்த குழலியும் அப்படிதான் மிக சிறந்த திரைப்படம் ஜாதி வெறியர்களுக்கும் ஜாதியை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளுக்கும் சமுதாயத்திற்கும் சரியான சவுக்கடி கொடுக்கும் திரைப்படம்.

மண் மணம் மாறாத கிராமியப் திரைப்படங்களை இந்தக் காலத்தில் பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது.

ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தாங்கள் வாழ்ந்த ஊர் தங்களது வாழ்வியலை மனதில் ஆழமாகப் பதிந்த அதை அப்படியே திரையில் கொண்டு வருகிறார்கள்.

இந்த குழலி திரைப்படத்தின் அப்படி ஒரு கிராமிய வாழ்வியலை கண் முன் கொண்டு வந்து விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சேரா கலையரன்.

திண்டுக்கல் அருகாமையில் உள்ள கிராமத்தில் உயர் சாதியைச் சேர்ந்தவர் கதாநாயகி ஆரா.

கதாநாயகி ஆராவுக்கும் அவரை விட பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கதாநாயகன் விக்னேஷ் உடன் சிறு வயதில் இருந்து பள்ளியில் ஒன்றாக படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள்.

நட்புடன் பழகி வந்த அந்த பழக்கம் 12வது வகுப்பு படிக்கும் போது அந்த நட்பு காதலாக வளர்ந்து விடுகிறது.

இவர்கள் இருவருடை காதல் விவகாரம் சாதி வெறி பிடித்த கதாநாயகி ஆராவின் வீட்டிற்கு தெரிய வர பெற்றோரும்
சொந்த பந்தங்களுக்கு தெரிய வருகிறது.

கதாநாயகி ஆராவின் பள்ளி படிப்பை நிறுத்துகிறார் அவருடைய தாய்.

கதாநாயகி ஆராவும் கதாநாயகன் விக்னேஷ் இருவரும் எங்காவது சென்று படிக்க ஆசைப்படுகிறார்.

இந்த இருவரின் காதல் என்ன ஆனது? காதலை ஏற்க இவர்கள் என்ன செய்கின்றனர்? படிக்க ஆசைப்பட்ட இவர்கள் படிக்க சென்றார்களா? செல்லவில்லையா?
அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த குழலி திரைப்படத்தின் மீதிக் கதை.

காக்கா முட்டை’ திரைப்படத்தில் சிறுவனாக நடித்து தேசிய விருது பெற்ற விக்னேஷ் தனி கதாநாயகனாக களமிறங்கி இருக்கிறார்.

சுப்பு கதாபாத்திரத்தில் பள்ளி மாணவனாக அந்தக் கதாபாத்திரத்திற்கு அப்படியே உயிர் கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் விக்னேஷ் அவனுடைய விடலைப்பருவ நடிப்பை அழகாகவும் அருமையாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இனம்புரியாத பள்ளிப் பருவ காதலை அழகாக ஏற்று நடித்திருக்கிறார்.

இந்தக் குழலி திரைப்படத்தில் கதாநாயகியாக ஆரா நடித்திருக்கிறார்.

குழலி திரைப்படத்தின் அறிமுகக் கதாநாயகியான ஆரா அறிமுகம் ஆகி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆரா நாம் படித்த பள்ளி பருவ தோழியை நினைவுப் படுத்தும் அளவிற்கு அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

குழலி கதாபாத்திரத்தில் புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி பொருத்தமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி ஆராவின் தோழியாக நடித்திருப்பவர், கதாநாயகன் விக்னேஷின் பள்ளித் தோழர்கள் கதாநாயகி ஆராவின் தாய் செந்திகுமாரி என அனைவருமே பொருத்தமான தேர்வு.

கதாநாயகியின் தாயாக வரும் செந்திகுமாரி, சாதியப் பெருமிதம் பேசும் இறுதிக்காட்சியில் செய்யும் செயல் அனைவரின் கைத்தட்டல் பெறுகிறது.

மேலும் ஆட்டோகிராப் அலெக்ஸ் கதாநாயகனின் தந்தையாக மிகவும் அற்புதமான நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தி உள்ளார்

கிராமத்து மனிதர்களை நமது கண் முன் அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

இந்த குழலி திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார் என திரைப்படம் பார்க்கும் அனைவரையும் கேட்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் உதயகுமார்
இளையராஜாவின் தீவிர ரசிகராக இருப்பார் போலிருக்கிறது..

பின்னணி இசையிலும், பாடல்களிலும் தனது திறமை வெளிப்பட வேண்டும் என உழைத்திருக்கிறார் இசையமைப்பாளர் உதயகுமார்.

இசையமைப்பாளர் உதயகுமார் தமிழ் திரைப்பட உலகில்
மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.

கிராமத்து பின்னணியை சமீரின் ஒளிப்பதிவு மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

அந்த மக்களின் வாழ்வியலை எதார்த்தமாக படம் பிடித்து திரைப்படம் பார்க்கும் நம்மளை கிராமத்துக்கு அழைத்து செல்கிறார் ஒளிப்பதிவாளர் சமீர்.

ஒளிப்பதிவாளர் சமீர், திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார வயல்வெளி மலை பகுதிகளை அழகாகப் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

தமிழக உள்ள முக்கால்வாசி கிராமங்களில் இன்றளவும் நடக்கும் சாதிய பிரச்சனைகளை அழுத்தமாக சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டக்கூடியது.

சாதிய எதிர்ப்பை வசனங்கள் மூலம் அழுத்தமாக சொல்லி கைத்தட்டல் பெறுகிறார் இயக்குனர் சேரா கலையரசன்.

சாதியை மையமாகக் கொண்ட திரைப்படங்களை திரைப்படமாக்க உருவாக்குவதற்கு அதிக கவனம் இந்த காலத்தில் தேவைப்படுகிறது.

எந்த சாதி என குறிப்பிடாமல் திரைப்படம் பார்ப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு கவனமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சேரா கலையரசன்

மொத்தத்தில் குழலி திரைப்படம் எதார்த்தமான பூங்குழலி.

error: Content is protected !!