1,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் அன்பால் நெகிழ வைத்த லெஜெண்ட் சரவணன்!

1,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் அன்பால் நெகிழ வைத்த லெஜெண்ட் சரவணன்!

சென்னை 27 செப்டம்பர் 2026 1,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன் ரசிகர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய நடிகரும் தயாரிப்பாளருமான லெஜெண்ட் சரவணன்!

நடிகரும் தயாரிப்பாளருமான லெஜெண்ட் சரவணன், தனது ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன்  கலந்துரையாடியதுடன், சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

அகில இந்திய லெஜெண்ட் சரவணன் ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவர் T. முத்துதுரை முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் புதிதாக ரசிகர் மன்றத்தில் இணைந்த 1,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு லெஜெண்ட் சரவணன் மரக்கன்றுகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற ரசிகர்களை நேரில் சந்தித்துப் பேசிய அவர், அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்.

ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் நேரில் பகிர்ந்துகொண்ட இந்தச் சந்திப்பு, விழாவில் பங்கேற்றவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ரசிகர் மன்றத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு, ரசிகர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

ரசிகர்களுடனான அன்பான சந்திப்பு, மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் எனப் பல்வேறு அம்சங்களுடன் நடைபெற்ற இந்த விழா, லெஜெண்ட் சரவணன் ரசிகர் மன்றத்தின் சமூகப் பணிகளுக்கு மேலும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.

error: Content is protected !!