இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி சத்யராஜ் மகிமா நம்பியார் நடிக்கும்  ‘மண் டாடி’ !!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி சத்யராஜ் மகிமா நம்பியார் நடிக்கும்  ‘மண் டாடி’ !!

சென்னை 19 ஏப்ரல் 2025 தமிழ் திரைப்பட உலகில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் சூரி தற்போது கதையின் நாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் விடுதலை 1, விடுதலை 2, கருடன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

நடிகர் சூரியின் கதாநாயகனுக்கான நடிப்பை தமிழ் திரைப்பட ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

ஆனால் இவர் நடிப்பில் வெளிவந்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம் மட்டும் படு மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

தற்போது ‘விலங்கு’ இனையத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இதில் ஐஸ்வர்யா லட்சுமி கதுநாயகியாக நடித்துள்ளார்.

இந்த மாமன் திரைப்படம் வருகிற மே 16ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூரி-யின் அடுத்த திரைப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அத்துடன் “காயத்தை ஏற்படுத்திய ஆயுதத்தால் மட்டுமே காயத்தை ஆற்ற முடியும்” என்ற வசனமும் அறிவிப்பு போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு “மண்டாடி” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த “மண்டாடி” திரைப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவன சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்..

இயக்குநர் வெற்றிமாறனிடம் இனை இயக்குநராகப் பணிபுரிந்தவரும் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த “செல்ஃபி” திரைப்படத்தையும் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.

இந்த “மண்டாடி” திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார்  இசையமைக்கிறார்.

“மண்டாடி’ என்பது கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர், நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என கூறப்படுகிறது.

‘மண் டாடி’ திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி இன்று ஏப்ரல் 19ஆம் தேதி மாலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!