கதையின் நாயகனாக சூரி நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்!!

சென்னை 01 செப்டம்பர் 2022 கதையின் நாயகனாக சூரி நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்!!

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, ரெட் ஜெயண்ட் மூவிஸ் & ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ திரைப்படத்தினை வழங்குகின்றனர் .

விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் & ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவன தயாரிப்பாளர்கள்
திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ திரைப்படத்தை வழங்குகிறார்கள்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள இறுதிக்கட்டத்தை எட்டி, பரபரப்பாக தயாராகி வருகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இத்திரைப்படம் ஏற்கனவே அதன் பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் திரை ஆரவலர்களிடையே பெரிய அளவினில் அலைகளை உருவாக்கியுள்ளது.

மேலும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடு தற்போது பல திரைப்படங்களுக்கு வெற்றியின் முகவரியாக மாறியிருப்பதால், விடுதலை திரைப்படமும் பெரும் வெற்றியாக அமையுமென தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார் நம்புகிறார்.

error: Content is protected !!