அம்…ஆ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- திலீஷ் போத்தன், தேவதர்ஷினி, ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவ், டி.ஜி.ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்சியர், மாலா பார்வதி, ஜெயராஜன் கோழிக்கோடு, முத்துமணி, நவாஸ் வள்ளிக்குன்னு, பேபி நிஹாரா, நஞ்சியம்மா, சரத் தாஸ், நீரஜா ராஜேந்திரன், ரகுநாத் பிரபாகரன், அஜீத் பிரபாகரன், அஜியுர்ஷா பலேரி, விஜுபால், ஜோஸ் பி ரஃபேல், சதீஷ் கே குன்னத், அம்பிலி ஓசெப், கபானி ஹரிதாஸ், சினேகா அஜித், லேதா தாஸ், ரேமாதேவி, கே.கே. இந்திரா, விஷ்ணு வி.எஸ்., லதா சதீஷ், நமிதா ஷைஜு, பிந்து எல்சா, ஜிஜினா ஜோதி, லின்சி கொடுங்கூர், லிபின் டோமுய்யா,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- தாமஸ் செபாஸ்டியன்.
ஒளிப்பதிவாளர் :- அனிஷ்லால் ஆர்.எஸ்.
படத்தொகுப்பாளர் :- பிஜித் பாலா.
இசையமைப்பாளர் :- கோபி சுந்தர்.
தயாரிப்பு நிறுவனம் :- காப்பி புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- காப்பி புரொடக்ஷன்ஸ்.
ரேட்டிங்:- 4./5.
மலையாளத் திரைப்பட உலகில் வெளிவந்து மாபெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ள இந்த “அம் ஆ” திரைப்படம், கேரளாவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி 60 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கேரளாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த “அம் ஆ” திரைப்படம், தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இன்று தமிழகத்தில் வெளியாகிறது.
கேரளாவில் உள்ள மலை கிராமத்தில் (அம்மணியம்மா.)
தேவதர்ஷினி ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.
அந்த மலை கிராமத்திற்கு கதாநாயகன் திலீஷ் போத்தன், சாலை வசதி செய்து கொடுக்கும் அதிகாரியாக வருகிறார்
கதாநாயகன் திலீஷ் போத்தன், தன்னை அந்த கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுப்பதற்கு வந்தவர் போல் தன்னை காட்டிக் கொள்கிறார்.
அந்த கிராமத்தில் உள்ள
ஊர்த் தலைவர் ஜாபர் இடுக்கி
கதாநாயகன் திலீஷ் போத்தன்,நெருங்கிப் பழகி ஊரை சுற்றிப் பார்க்கிறார்.
நாட்கள் நகர நகர அவர் குழந்தையுடன் வாசிக்கும் (அம்மணியம்மா )தேவதர்ஷினி சந்திப்பதற்காக கதாநாயகன் திலீஷ் போத்தன், வந்தவர்
என தெரிய வருகிறது.
கதாநாயகன் திலீஷ் போத்தன், சந்தித்ததும் (அம்மணியம்மா) தேவதர்ஷினி பயந்து நடுங்குகிறார்.
தன்னுடன் உள்ள குழந்தை பறிபோய்விடுமோ என (அம்மணியம்மா ) தேவதர்ஷினி பதறுகிறார்.
யார் அந்த (அம்மணியம்மா) தேவதர்ஷினி குழந்தை யாருடையது இந்த குழந்தைக்கும்
கதாநாயகன் திலீஷ் போத்தன் என்ன தொடர்பு என்ன?
என்பதுதான் இந்த ‘அம் ஆ’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘அம் ஆ’ திரைப்படத்தில் கதாநாயகனாக திலீஷ் போத்தன் நடித்திருக்கிறார்.
ஆரம்ப காட்சிகளில் அவர் நடிப்பில் வில்லன் போல திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நினைக்க வைத்து, இடைவேளைக்கு பின் கதையின் நாயகனாய் உருமாறி நிற்கிற திலீஷ் போத்தனின் நடிப்பு மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
இந்த ‘அம் ஆ’ திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி அருமையாகவும் மிகவும் பரிதாபமாகவும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிற, தேவதர்ஷினி தனது
குழந்தையை பாசமாக வளர்க்கிற, குழந்தையை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் தவிக்கிற அம்மணியம்மாள் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தேவதர்ஷினி இந்த திரைப்படத்திற்கு கேரளாவில் உள்ள அவார்ட் பல அவார்ட் கிடைக்க வேண்டும்.
தமிழ் திரைப்பட உலகில் காமெடி கதாபாத்திரங்களில் ரசிக்க வைக்கிற தேவதர்ஷினி. அவருடைய தோற்றமும் மாற்றமும் நடிப்பிலிருக்கும் தரமும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.
கலகலப்பாய் கலந்து பழகுகிற லோக்கல் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாபர் இடுக்கி அற்புதமாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அனிஷ்லால் ஆர்.எஸ் கேரளாவில் உள்ள அனைத்து மலைகள் மற்றும் அருவிகள் காட்சி படுத்திய விதம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் பின்னணி இசையும், கதையோட்டத்திற்கு மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.
தாய் குழந்தை பாசப்பிணைப்பை மையப்படுத்திய கதையை மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் தாமஸ் செபாஸ்டியன்.
மொத்தத்தில் ஒரு தாயின் பாசத்தை பேசும் இந்த”அம் ஆ” சிறந்த திரைப்படம் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய திரைப்படம்.











