நடிகர் சங்க உறுப்பினர்களுக்காகவும் நாடகக் கலைஞர்களும் ஏற்றமும் மாற்றமும் ஏற்பட செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சந்தித்தனர் சங்க முன்னாள் தலைவர் திரு நாசர்
சென்னை 12 மே 2
நடிகர் சங்க உறுப்பினர்களுக்காகவும் நாடகக் கலைஞர்களும் ஏற்றமும் மாற்றமும் ஏற்பட செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சந்தித்தனர் சங்க முன்னாள் தலைவர் திரு நாசர்
அன்பார்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நமது நாடகக் கலைஞர்களும் நடிகர்களும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக.கொரனா.. எனும் கொடிய தொற்றின் காரணமாக வேலைவாய்ப்பு இழந்து நாடகங்கள் நடத்த முடியாமல் வறுமைச் சூழ்நிலையின் காரணமாக இருப்பதை மாண்புமிகு நமது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களிடம் நம் அனைவரின் வாழ்விலும் ஏற்றமும் மாற்றமும் ஏற்பட இன்று நமது சங்க முன்னாள் தலைவர் திரு நாசர் அவர்களும் நம் நாடகக் கலைஞர்களின் குரலாக ஒவ்வொரு காலகட்டங்களிலும். நடிகர் சங்க உறுப்பினர்களுக்காக குரல் கொடுத்து வரும் நடிகர் சங்கத்திற்காக குரல் கொடுத்து வரும் அண்ணன் திரு பூச்சி முருகன் அவர்கள் மற்றும் நடிகர் திரு ராஜேஷ் சார் அவர்கள் நாடகக் கலைஞர்களுக்கு நடித்த நடிகர்களுக்கு உடனடியாக உதவித்தொகை கிடைத்திடவும் படப்பிடிப்புகள் தொடர்ந்து அரசு கூறும் வழிகாட்டுதலின்படி படப்பிடிப்புகள் நடத்த ஆவன செய்யும்படி கோரிக்கை வைத்து வந்தனர்.

அதை இன்று இரவே தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மாண்புமிகு அமைச்சர் கூறியிருக்கிறார்.

இதற்கு உறுதுணையாய் இருக்கக்கூடிய அனைத்து அதிகாரிகளுக்கும் நடிகர் சங்க முன்னோடிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்











