தமிழகத்தில் வாழும் அனைத்து நாடகக் கலைஞர்கள் மற்றும் கலைநிகழ்ச்சி கலைஞர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.

தமிழகத்தில் வாழும் அனைத்து நாடகக் கலைஞர்கள் மற்றும் கலைநிகழ்ச்சி கலைஞர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர்

அவர்கள் தங்கள் தொழில் மூலம் வாழ்வாதாரம் நடத்திட வழிவகை செய்திடும் வகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கான கோரிக்கை மனுவையும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களுக்கான கோரிக்கை மனுவையும், நேற்று 15 .9 .20ஆம் தேதி அன்று மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களிடம் ,வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியாதைக்குரிய டாக்டர். ஐசரி.கே. கணேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திரைப்பட இயக்குனர் & நடிகருமான மரியாதைக்குரிய கே. பாக்யராஜ் அவர்கள் தலைமையில், திரைப்பட கலைஞரும் கலைமாமணியுமான திருமதி.குட்டிபத்மினி அவர்கள், திரு மருது பாண்டியன் அவர்கள் மூவரும் சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பாக நேரில் சந்தித்து கொடுத்தனர். பரிசீலனை செய்து, ஆவண செய்வதாக அமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

CLOSE
CLOSE
error: Content is protected !!