அட அது நான் இல்லப்பா… அதுவேற மாறன்.. நான் ரொம்ப நல்லா இருக்கேன். லொள்ளு சபா மாறன் விளக்கம்..
சென்னை 12 மே 2021
அட அது நான் இல்லப்பா… அதுவேற மாறன்.. நான் ரொம்ப நல்லா இருக்கேன். லொள்ளு சபா மாறன் விளக்கம்.
நடிகர் சந்தானம் திரைப்படங்களில் அதிகமாக தோன்றும் பிரபல நடிகர் ‘லொள்ளு சபா’ மாறன், தன்னை பற்றி வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வந்தவர் திரைப்பட நடிகர் கில்லி மாறன் . இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , நடிகர் கில்லி மாறன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவருக்கு வயது 48. 2004-ஆம் ஆண்டு நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் இதை அடுத்து கில்லி டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இந்த தகவலுடன் ‘லொள்ளு சபா’ மாறனின் புகைப்படம் இணைந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது பற்றி, நடிகர் சந்தானம் படங்களில் அதிகமாக தோன்றும் பிரபல நடிகர் ‘லொள்ளு சபா’ மாறனிடம் தொடர்பு கொண்டதற்கு, “அட அது நான் இல்லப்பா… அதுவேற மாறன்.. நான் ரொம்ப நல்லா இருக்கேன்.
சில ஊடகங்களில் எனது புகைப்படத்தை போட்டு அந்த செய்தியை வெளியிட்டன.
பின்னர் அதே ஊடகங்களில் இருக்கும் நண்பர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு தெளிந்த பின், மீண்டும் அவற்றை சரி செய்து விட்டனர்.
நேற்றைய தினம் கூட நகைச்சுவை நடிகர் அண்ணன் நெல்லை சிவா மரணமடைந்தார்.
தினமும் நிகழும் இப்படியான மரண சம்பவங்கள் மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.” என்றார்.











