‘மிராய்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரியா சரண், ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் ஸ்ரீனு, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கார்த்திக் கட்டம்னேனி
ஒளிப்பதிவாளர் :- கார்த்திக் கட்டம்னேனி.
படத்தொகுப்பாளர் :- ஸ்ரீகர் பிரசாத்.
இசையமைப்பாளர் :- கௌரா ஹரி.
தயாரிப்பு நிறுவனம் :- பீப்பிள் மீடியா பேக்டரி.
தயாரிப்பாளர் :- டி.ஜி. விஸ்வ பிரசாத், க்ரிதி பிரசாத்.
ரேட்டிங் 3.75./5.
கி.மு 232-ல் கலிங்கத்து போருக்குப் பின்னர் பேரரசன் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை ஒன்பது புத்தகங்களில் எழுதி மறைத்து வைக்கிறார்.
தீய எண்ணம் படைத்தவர்கள் தீய சக்திகள் இந்த ஒன்பது புத்தகங்களை கைபற்றாமல் இருக்க ஒன்பது போர்
வீரர்களை பேரரசன் அசோகன் நியமிக்கிறார்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சமகாலத்தில் இந்த ஒன்பது புத்தகங்களை அடைய தீய சக்தி படைத்த வில்லன் மனோஜ் மஞ்சு. விரும்புகிறான்.
பல யுகம் கடந்து தற்போது அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க தீய சக்தி படைத்த வில்லன் மனோஜ் மஞ்சு திட்டமிடுகிறான்.
இந்த ஒன்பது புத்தகங்களை கைப்பற்றி இந்த உலகையே அழிக்க திட்டம் தீட்டும் வில்லன் மனோஜ் மஞ்சு அறிந்துக் கொள்ளும் ஸ்ரேயா சரண் அழிக்க தீய சக்தி படைத்த வில்லன் மனோஜ் மஞ்சு அழிக்க ஒரு வழிதான் இருக்கிறது அதுவும் தனது மகன் கதாநாயகன் தேஜா சஜ்ஜாதான், என தெரிந்துக்கொள்கிறார்.
அதோடு தாய் பாசம் கிடைக்காமல் தான் யார் என்றே தெரியாமல் தனது மகன் கதாநாயகன் தேஜா சஜ்ஜா அனாதையாக விட வேண்டும், அந்த ஒன்பது புத்தகத்தை தீய சக்தி படைத்த வில்லன் மனோஜ் மஞ்சு அடைய வரும் போது தனது மகன் கதாநாயகன் தேஜா சஜ்ஜாதான், ராமரின் ஆயுதம் மிராஜை அடைந்து தீய சக்தி படைத்த வில்லன் மனோஜ் மஞ்சுவை அழிக்க வேண்டும் என்பதை ஸ்ரேயா சரண் மிகப்பெரிய மந்திரத்தை வகுத்து வைக்கிறார்.
இந்த நிலையில் ஸ்ரேயா தன் தனது தனது மகன் கதாநாயகன் தேஜா சஜ்ஜா, அனாதையாக வாரணாசி-ல் விட்டு செல்கிறார்.
அதனைத் தொடர்ந்து 24 வருடம் கழித்து கதாநாயகி ரித்திகா நாயக், ஸ்ரேயா சரண் மகன் தேஜா தேஜாவை தேடி வந்து உண்மையை புரிய வைக்க, பிறகு என்ன கதாநாயகன் தேஜா சஜ்ஜா மிராயை, தேடி கண்டுபிடித்து அடைந்தாரா? அடையவில்லையா?
கதாநாயகன் தேஜா சஜ்ஜா இந்த ஒன்பது புத்தகங்களை காப்பாற்றி உலகையே அழிக்க நினைக்கும் தீய சக்தி படைத்த வில்லன் மனோஜ் மஞ்சு பழி வாங்கினாரா பழி? வாங்கவில்லையா? என்பதுதான் இந்த மிராய் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த மிராய் திரைப்படத்தில் கதாநாயகனாக தேஜா சஜ்ஜா நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் தேஜா சஜ்ஜா அற்புதமான நடிப்பை கொடுத்து முழு திரைப்படத்தையும் ஒற்றை ஆளாக தனது தோள்களில் சுமந்து செல்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் தேஜா சஜ்ஜா ஆக்சன் காட்சிகளாக இருந்தாலும் சரி, முயற்சி பொங்கும் காட்சிகளாக இருந்தாலும் சரி, நடிப்பின் மூலம் பிரகாசிக்கிறார்.
இந்த மிராய் திரைப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா நாயக், நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக், மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு வில்லன் திரைப்படத்திற்கு அவரது கதாபாத்திரம் மிக விரிவாகவும், சக்திவாய்ந்த தீவிரத்துடனும் அவரை தோற்கடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று தூண்டும் அளவிற்கு மிகப்பெரிய பலத்தை சேர்க்கிறார்.
ஷ்ரேயா சரண், ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் ஸ்ரீனு,ர மற்ற நடிகர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி ஒளிப்பதிவு மூலம் கலர்ஸ் இல்லாம காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் கெள்ரா ஹரியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாண்டத்திற்கு பிரமாண்டம் சேர்த்திருக்கிறது.
ஆன்மீகம் பற்றி பேசும் கதை என்றாலும், அதை அனைத்து தரப்பினரும் கொண்டாட கூடிய வகையில் கிராபிக்ஸ் காட்சிகளை, அனைத்தும் சிறப்பாக உள்ளது.
மிராய் என்ற கோளை மையப்படுத்திய கதையில், மந்திர புத்தகம், மந்திர ஊர், மந்திர வித்தைகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை வியக்க கூடிய விதத்தில் காட்சிப்படுத்தி திரைப்படத்தை மிகச் சிறப்பான வழியில் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி.
மொத்தத்தில், ‘மிராய்’ வியக்க வைக்கும் சூப்பர் திரைப்படம்.











