சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பிரச்சாரத்தைத் தொடங்கினார் !!
சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பிரச்சாரத்தைத் தொடங்கினார் !!
சென்னை 14 செப்டம்பர் 2025 தமிழ் நாட்டில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஏழு மாதங்களே இருக்கும் நிலையில், திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், ஆகிய இரு மபெரும் கட்சிகள் ஏற்கனவே பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார்கள்.
தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை உருவாக்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், செப்டம்பர் 13, தேதி சனிக்கிழமை அன்று தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், முதல் பிரச்சாரத்தை திருச்சிராப்பள்ளியில் தொடங்குகினார்.
டிசம்பர் மாதம் இறுதி வரை தமிழ் நாடு முழுவதும் வலம் வரும் வகையில் சூறாவளி சுற்றுப் பயணம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்,சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு காவல்துறையினர் கெடுபிடிகளைக் காட்ட தொடங்கி விட்டனர்.
தனது முதல் பிரச்சாரத்தை ரோடு ஷோவாக நடத்துவதற்கு அவர் முடிவு செய்திருந்தார்.
ஆனால், ரோடு ஷோக்கான அரசாங்க அனுமதி மற்றும் காவல்துறையினர் ன
அனுமதி கிடைக்கவில்லை.
திருச்சியில் சத்திரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசுவதற்கு தமிழக வெற்றி கழகத்தின் ஏற்பாடு செய்துருந்தனர்.
ஆனால் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
மரக்கடையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திறந்த வேனில் நின்றபடியே பேச வேண்டும் – விஜய் வாகனத்தின் முன்பும், பின்பும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து வரக்கூடாது,
விஜய் வரும் வழியில் விளம்பரப் பதாகைகள் வைக்கக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய கேரவன் வாங்கப்பட்டுள்ளது.
இதில் பிரச்சார கேரவனில் பல நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் ‘வீக் எண்ட்’ பிரச்சாரத்தை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகம் தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு ஒன்று – விஜயின் முதல் பிரச்சார தினமான 13 ஆம் தேதி சென்னையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியை டிவிக்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.
இதனால் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு திரளும் கூட்டத்தைக் குறைக்கலாம் என்பது திட்டம்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது.











