Saturday, January 29
Shadow

ஜெயில் திரை விமர்சனம் ரேட்டிங் –3 /5

நடிகர் நடிகைகள் – ஜிவி பிரகாஷ்குமார், ராதிகா சரத்குமார், அபர்நதி, நந்தன் ராம், ரவிமரியா, கானா முத்து, ஜெனிஃபர், மணிமேகலை, பசங்க பாண்டி, பிடி செல்வகுமார், கானா குணா, சரண்யா ரவிச்சந்திரன், மற்றும் பலர்.

தயாரிப்பு – கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ்.

இயக்கம் –  ஜி வசந்தபாலன்.

ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா.

படத்தொகுப்பு – ரேமண்ட் டெரிக் கிராஸ்டா.

இசை – ஜிவி பிரகாஷ் குமார்.

திரைப்படம் வெளியான தேதி – 09 டிசம்பர் 2021

ரேட்டிங் –3 /5

வெயில், அங்காடித் தெரு’ அரவான் என எளிய மனிதர்களின் வாழ்க்கையை அவ்வளவு யதார்த்தமாகப் பதிவு செய்தவர் இயக்குனர் வசந்தபாலன்.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய சில திரைப்படங்களும் அவர் மீதான பார்வையை ரசிகர்களிடத்தில் அதிகரிக்கச் வைத்தது.

தனது தாய் ராதிகாவுடன் சென்னையில் உள்ள ஹவுசிங் போர்டு வசித்து வருகிறார் கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார்.

ஜிவி பிரகாஷ் குமார் பாண்டி, நந்தன் ராம் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். அனைவருமே காவேரி நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள்.

இந்த மூவரும் இணைபிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் திருடுவதை மட்டுமே தொழிலாக வைத்து இருக்கிறார் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார்.

ஒரு பிரச்சனையில் நண்பன் நந்தன் ராமை இழக்கிறார் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார்.

மேலும் மற்றொரு நண்பர் பாண்டி ஜெயிலுக்கு சென்று விடுகிறார்.

இதில் நந்தன் ராம் கஞ்சா விற்பவர்.

பாண்டி சீர் திருத்தப் பள்ளியிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தவர்.

ஜிவி பிரகாஷ்குமார் சிறு திருட்டுக்களை செய்து சம்பாதிப்பவர்.

இதில் பாண்டி பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்கிறார்.

காவல்துறை அதிகாரியாக ரவி மாரியா கஞ்சா கடத்தும் வேலையை கொடுக்க அதை செய்து விட்டு நந்தன் ராம் ஏமாற்றி விடுகிறார்.

இதனால் ஆத்திரமடையும் காவல்துறை அதிகாரி ரவிமரியா நந்தன் ராமை போதைக் கும்பல் கோஷ்டி மோதலில் சிக்கவிட்டு கொன்று விடுகிறார்.

அதன் பின் கஞ்சாவை நந்தன் ராம் ஒளித்து வைத்திருக்கும் இடத்தை அறிய முற்படுகிறார்.

இந்த தேடுதல் சண்டையில் பாண்டி சிறை செல்ல நேரிடுகிறது.

இதனால் நண்பர்களின் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை கதாநாயகன் ஜீ.வி.பிகாஷ்குமார் ஏற்றுக் கொள்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் யார் என்பதை அறிய கதாநாயகன் ஜீ.வி.பிரகாஷ்குமார் முற்படுகிறார்? இறுதியில் நண்பரை மீட்டரா? இவர்களின் கதி என்னானது? என்பது தான் ஜெயித்து திரைப்படத்தின் மீதிக்கதை.

அசல் சேரி பகுதி கர்ணாவாக அசத்தியிருக்கிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார்.

இவரிடம் உள்ள நடிப்பு திறமையை இயக்குனர் வசந்தபாலன் கொண்டு வந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

Read Also  அசுரகுரு திரை விமர்சனம். ரேட்டிங் - 2.25/5

குறிப்பாக வட சென்னை சேரி பாஷையில் சிறப்பாக பேசி கவர்ந்திருக்கிறார் கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி சேரி பகுதி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் நண்பர்களாக நடித்துள்ள நந்தன் ராம் மற்றும் பசங்க பாண்டி இருவரும் சிறப்பான தேர்வு.

இவர்களின் மிகைப்படுத்தப்படாத நடிப்பு திரைப்படத்திற்கு பலம். ராதிகாவிற்கு பெரிதாக காட்சிகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் காத்தோடு காத்தானேன் என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த பாடல் விஷுவலில் ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் கதாநாயகி அபர்ணதியின் ரொமான்ஸ் அதிகம்.

பாடல்கள் ரசிக்க வைத்தாலும், கதைக்கு சில பாடல்கள் தேவையா? என்று சொல்லு அளவிற்கு உள்ளது.

கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களின் வலிகளை இயக்குனர் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருந்தால் ரசிக்க வைத்திருக்கும்.

திரைப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி மெதுவாகவும் செல்கிறது.

மொத்தத்தில் ‘ஜெயில்’ திரைப்படம் பார்க்கலாம்.

CLOSE
CLOSE