ஓணான் திரை விமர்சனம் ரேட்டிங் –2.25 /5

நடிகர் நடிகைகள் – திருமுருகன் சதாசிவம், ஷில்பா மஞ்சுநாத், காளிவெங்கட், சிங்கம்புலி, சரவணன் சக்தி, சனுஜா சோமந்த், ராஜேஷ்வரி, பூ ராமு, ஷர்மிளா, மாஸ்டர் ஜுபின், பேபி வேதா மற்றும் பலர்.

இயக்கம் – சென்னன்.

ஒளிப்பதிவு – ரஜீஷ் ராமன்.

படத்தொகுப்பு – ஈப்ரூ FX

இசை – ஆன்டனி ஆப்ரகாம்.

தயாரிப்பு –எலிஃபண்ட் ப்ளை எண்டர்டெயின்மெண்ட்

ரேட்டிங் –2.25 /5

யாருக்கும் தீங்கு எதையும் சேதம் விளைவிக்காத உயிரினம் ஓணான் கண்டால் அனைவரும் அதை சித்திரவதை செய்வார்கள்.

ஆனால் அணில் என்கின்ற உயிரினம் அனைத்து செடிகளையும் அனைத்து கணிகளையும் சேதப்படுத்தும் அணிலை கண்டால் கொஞ்சுவார்கள்.

அப்படி தீங்கு நினைக்காத ஒரு குடும்பத்தை ஒருவன் வஞ்சிக்கும் கதையே இந்த ஓணான் திரைப்படம்.

இயகுநர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல், ஓவியா, திருமுருகன் சதாசிவன், கஞ்சா கருப்பு நடித்து வெளியான, நடிப்பில் வெளி வந்த “களவாணி’ திரைப்படத்தில் நடிகை ஓவியாவின் அண்ணனாகவும் வில்லனாகவும் எதார்த்தமான கதைக்களம் மட்டுமல்லாமல், நடிகர்களின் எதார்த்த இயல்பான நடிப்பும் இந்த களவாணி திரைப்படத்தை மாபெரும் வெற்றித் நிரைப்படமாக அமைந்தது.

அதன் பிறகு அதர்வா முரளி நடிப்பில் வெளிவந்த ஈட்டி திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவின் அண்ணனாக நடித்தவர் திருமுருகன் சதாசிவன் பிரபலமானார்.

இயக்குநராகவும், நடிகராகவும் பல பரிமாணங்களில் தோன்றிய திருமுருகன் சதாசிவம் களவாணி திரைப்படத்தைத் தொடர்ந்து ஈட்டி, பென்சில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

வித்தியாசம் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் திருமுருகன் தற்போது அப்படி ஒரு வித்தியாசம் நிறைந்த கதைக்களத்தில் நடித்து வருகிறார்.

இந்த ஓணான் திரைப்படத்தில் திருமுருகன் சதாசிவன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

தஞ்சையில் பாபநாசத்துக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்திறகு கதாநாயகன் திருமுருகன் சதாசிவம்,
விலாசம் ஒன்றை தேடி வர, வந்த இடத்தில் பூ ராமுவை ஒரு தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறார்.

ஆதரவில்லாத கதாநாயகன் திருமுருகன் சதாசிவம், தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் பூ ராமு.

அங்கு, பூ ராம் குடும்பத்தில் சரவணன் சக்தி பிரச்சனைகளை இழுக்க, கதாநாயகன் திருமுருகன் சதாசிவம், எண்ட்ரீ ஆகி பூ ராம் குடும்பத்தை காப்பாற்றுகிறார்

இதனால், பூ ராம், தன் குடும்பத்தில் கதாநாயகன் திருமுருகன் சதாசிவத்திற்க்கு அடைக்கலம் கொடுக்கிறார்.

பூ ராமு தம்பதியுடன் அவர்களின் மகனான காளி வெங்கட் மனைவி குழந்தைகளுடனும், திருமணமாகாத கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்தும் இருக்கிறார்கள்.

அந்த பூ ராமு வீட்டில் உள்ள சில்லரை வேலைகளைச் செய்து வரும் கதாநாயகன் திருமுருகன் சதாசிவம்,
மீது ஷில்பா மஞசுநாத் காதல் கொள்ள, அவருக்கே கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்தை திருமணம் செய்து கொடுக்கிறார்கள்.

அவர்களின் முதலிரவில் தனது குடும்பத்தையே கொலை செய்த மனநோயாளிதான் கதாநாயகன் திருமுருகன் சதாசிவம் என்ற உண்மை காளி வெங்கட் திருமணம்
முடிந்த பிறகு தான் உண்மையான காரணத்தை அறிகிறார்;.

அன்று இரவு, கதாநாயகன் திருமுருகன் சதாசிவம் ஒரு சைக்கோ கொலைகாரன் என்பதை பழைய நாளிதழ் ஒன்றினை பார்த்து தெரிந்து கொள்கிறார் காளி வெங்கட்.

அதைக் குடும்பத்தினரிடம் சொன்னால் கதாநாயகன் திருமுருகன் சதாசிவம் எல்லோரையும் கொன்று விடுவார் என்று பயந்து மூடி மறைப்பதுடன் இவரே மன நோயாளி போல் ஆகி விடுகிறார்.

அந்த ஊருக்கு கதாநாயகன் திருமுருகன் சதாசிவம் வந்த காரணம் என்ன..? அவரிடம் இருந்து தன் குடும்பத்தை கொலை செய்த காளி வெங்கட்டின் குடும்பம் தப்பியதா..? இல்லையா ? முதல் காட்சியில் போலீசில் சரண் அடையும் காலை வெங்கட் அவரை கொன்று தீர்த்தாரா..? இல்லையா? என்பதுதான் இந்த ஓணான் திரைப் படத்தின் மீதி கதை

களவாணி திரைப்படத்தில் வில்லனாக பார்த்த திருமுருகன் சதாசிவத்தை இதில் கதாநாயகனாக பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் சென்னன்.

திரைப்படம் முழுக்க சைக்கோ போலவே சுற்றித் திரிகிறார் கதாநாயகன் திருமுருகன் சதாசிவம்.

மனநோயாளியாகவும், சைக்கோ கொலைகாரனாகவும், நல்லவராகவும் வெவ்வேறு விதமாக சித்திரிக்கப்படும் கதாபாத்திரத்தை தேர்ந்த நடிப்பால் உடல் மொழியால் வேறுபடுத்தி உணர்ந்து நடித்துள்ளார் கதாநாயகனான திருமுருகன் சதாசிவம்.

பெரிதாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லன் திருமுருகன் சதாசிவம் (களவாணி) தொடங்கிய இடத்திலிருந்து காணாமல் போய் இப்போது இந்தப் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகத் திரும்பி வந்திருக்கிறார்

வில்லனாக இருந்து கதாநாயகனாக ஏறுமுகத்துடன் களமிறங்கியிருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே அவருக்கு வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் காமெடியனாக நாம் பார்த்துவிட்ட காளி வெங்கட்டுக்கு இப்படி ஒரு கொடூர முகம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர் நடிப்பு வரிசையில் இது ஒரு முக்கிய படம்.

வில்லனாக அதிர்ச்சி கொடுக்கும் காளிவெங்கட், வேறொரு பரிமாணத்திலும் பார்ப்பது வித்தியாசமான அனுபவம். அற்புத நடிப்பாற்றலால் உயிர்ப்பித்திருக்கிறார்.

அழகாக அமைதியாக வரும் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்,

சில திரைப்படங்களில் நாம் ஏற்கனவே பார்த்து விட்ட கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்துக்கு இது முதல் திரைப்படமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கிராமத்து இளமை அழகில் ஜொலிக்கிறார் கதாநாயகி ஷில்பா மஞசுநாத் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத், புடவையில் அழகான தேவதையாக வந்து செல்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக வந்த சனுஜா சோமந்த் அவர்களும் தனது கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார்.

பாசமிகு மனைவியாக நடிப்பால் கவரும் சனுஜா சோமந்த்,

காமெடி என்ற பெயரில் பேசிக்கொண்டே இருக்கும் சிங்கம்புலி, அடி வாங்கிக்கொண்டு ஒடிவிடும் கணவராக சரவணன் சக்தி.

ராஜேஷ்வரி, பாசக்கார தந்தையாக பூ ராமு, ஷர்மிளா, மாஸ்டர் ஜுபின், பேபி வேதா மிகையில்லா நடிப்பு படத்திற்கு சிறப்பு.

திரு முருகனின் முதல் மனைவியாக வரும் சனுஜா சோம்நாத் அந்த பாத்திரத்துக்கு ஏற்ற எடுப்பான தோற்றத்தில் மிடுக்காக இருக்கிறார். அவர் அநியாயமாக இறந்து போவது தான் வேதனை.

ரஜீஷ் ராமனின் ஒளிப்பதிவும், ஆன்டனி ஆப்ரகாம் இசையும் திரைப்படத்தின் பட்ஜெட்டுக்கு நியாயம் செய்து நிறைவைத் தந்திருக்கிறது.

நல்ல ஒரு மூலக்கருவை கையில் எடுத்த இயக்குனர் சென்னன். அதை கொண்டு செல்லும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார்.

ஒட்டு மொத்த கதையையும் இரண்டாம் பாதியில் அதுவும் கடைசி பத்து நிமிடங்களில் வைத்திருக்கிறார்.

சைக்கோ போல் சுற்றும் நாயகன் எப்போது தான் பேசுவார் என்று படம் பார்ப்பவர்களை எரிச்சலடைய வைத்துவிட்டார்.

கொலைகள் நடக்கும் இடத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது திரைக்கதை பிற இடங்களை மெதுவாக நகர்வதைக் கவனித்து சரி செய்திருக்கலாம்.

கொடூரமான கொலைகார
திரைப்படமாக தொடங்கிய கதை மன்னிப்பதே மனிதனின் மாண்பு என்று முடிவது சிறப்பு.

மொத்தத்தில் ஓணான் திரைப்படம் – நிறங்கள் மாற்றம்..!