மதுரை மணிக்குறவர் திரை விமர்சனம் ரேட்டிங் –1.75 /5

நடிகர் நடிகைகள் – ஹரிக்குமார், மாதவி லதா, G.காளையப்பன், சுமன், ராதாரவி, கெளசல்யா, சரவணன், பருத்தி வீரன் சுஜாதா, எம்.எஸ். பாஸ்கர், கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், அஸ்மிதா, பெசன்ட் நகர் ரவி ஓ.ஏ.கே சுந்தர, டெல்லி கணேஷ், மற்றும் பலர்.
இயக்கம் – ராஜரிஷி. K.
ஒளிப்பதிவு – டி.சங்கர்.
படத்தொகுப்பு –
வி.டி.விஜயன் கணேஷ்பாபு.
இசை – இளையராஜா
தயாரிப்பு – காளையப்பா பிக்சர்ஸ்.
ரேட்டிங் –1.75 /5
மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலும் பல கொலைக் குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உருவாக்கப்பட்டது.
மதுரையில் உள்ள மார்க்கெட்டில் குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார் கதாநாயகன் ஹரிக்குமார்.
மார்க்கெட் உள்ள மக்களிடம் அதிகம் வட்டிக்கு வட்டி பணம் வாங்கும் வில்லன் காளையப்பனுடன் மார்க்கெட்டில் வட்டி வசூல் செய்யும் போது மோதல் ஏற்படுகிறது.
மார்கெட்டில் காளையப்பனுடன்
நடக்கும் தகராறில் ஆரம்பித்து குளத்தை மீனுக்காக ஏலம் எடுக்கும் வரையிலும் கதாநாயகன் ஹரிக்குமாருக்கு ஏரியா எம்.எல்.ஏ சுமனுடன் மற்றும் சாராய வியாபாரி சரவணனுடன் கதாநாயகன் ஹரிக்குமாருக்கு மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க
கதாநாயகன் ஹரிக்குமாருக்கும் அவரது மாமன் மகளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் சுமனின் சூழ்ச்சியால் திருமணம் நின்றுவிட கதாநாயகி மாதவி லதாவை திருமணம் செய்து கொள்கிறார் கதாநாயகன் ஹரிக்குமார்.
இந்த நிலையில் ஏரியா எம்.எல்.ஏ சுமனுடன் மற்றும் சாராய வியாபாரி சரவணன் மற்றும் காளையப்பன் மூவரும் சேர்ந்து ஹரிக்குமாரை கொலை செய்து விடுகின்றனர்.
அதன்பின் ஹரிக்குமாரை போன்றே உருவம் கொண்ட ஒருவர் அந்த ஊர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் சேருகிறார்.
இதைக்கண்டு வில்லன்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.
இறுதியில் ஹரிக்குமார் இறந்தாரா? இல்லையா? இன்ஸ்பெக்டராக வந்த நபர் யார்? கதாநாயகன் ஹரிக்குமாரை கொலை செய்தவர்கள் என்ன ஆனார்கள்? என்பதுதான் இநத மதுரை மணிக்குறவர்
திரைப்படத்தின் மீதிக்கதை.
தமிழ் திரைப்பட உலகில் நடன இயக்குனாரக இருந்து பிறகு நடிகராக வலம் வந்தவர் கதாநாயகன் ஹரிக்குமார்
இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தியிருக்கிறார்.
இவர் ஆக்ஷன் காட்சியில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
மார்க்கெட்டில் உள்ள ஒரு தரம் குறைந்த வட்டிக்கு பணம் வசூல் செய்யும் கதாபாத்திரத்தில் அற்புதமாக பொருத்தியிருக்கிறார்.
தனது அண்ணனை கொன்றவர்களை பழிவாங்கும் இன்ஸ்பெக்டர் என இரண்டு வேடங்களில் சிறப்பாக செய்திருக்கிறார்.
கதாநாயகி மாதவிலதா பார்ப்பதற்கு அழகாக இருக்கீறார்.
கதாநாயகி மாதவிலதா நடிப்பில் அசத்திருக்கிறார்.
கதாநாயகி மாதவிலதா நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் வில்லன்களாக நடித்திருக்கும் சுமன், சரவணன் மற்றும் காளையப்பன் மூவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் டில்லி கணேஷ், ராதாரவி கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், அஸ்மிதா, பெசன்ட் நகர் ரவி ஓ.ஏ.கே சுந்தர, கெளசல்யா, பருத்தி வீரன் சுஜாதா அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.கே இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் இசையில், மனசுல பெரிய வந்தான் மதுரக்காரன். பாடல் கேட்கும் ரகம்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜரிஷி இயக்கியுள்ளார்.
மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை திரைக்கதை வடிவில் அனைவரும் ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜரிஷி
இந்த திரைப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் தொடர்ந்து இடம்பெறும் கதைகளில் ஒன்றாக இருக்கிறது.
பெரிதாக கதைக்கு முக்கியதுவம் கொடுக்காதது திரைப்படத்தின் சரிவு.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்தும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களின் வருத்தமாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘மதுரை மணிக்குறவர் திரைப்படம் சம்பவம் சரியில்லை.











